பகுத்தறிவாளர் பைந்தமிழ்வேந்தன் படத்திறப்பு-நினைவேந்தல்

viduthalai
1 Min Read

பாடி, மே 21- ஆவடி மாவட்டம் பாடி பகுதியில் வசித்து சுங்க  இலாகாவில் மேற்பார்வையாளராக Superintendent of Customs (Preventive) பணியாற்றிய  முற்போக்கு எண்ணம் கொண்ட சீரிய பகுத்தறிவாளர் கே.எஸ்.பைந்தமிழ்வேந்தன்  57ஆவது வயதில் உடல் நலக் குறைவு காரணமாக 11.5.2025 அன்று காலமானார். அவரது இறுதி நிகழ்வு எவ்வித சடங்குமின்றி நடைபெற்றது.

அவரது படத்திறப்பு நிகழ்ச்சி 17-05-2025  அன்று காலை 11-00 மணிக்கு சென்னை பாடி, எண்:47, டாக்டர் மூர்த்தி நகர் இரண்டாவது குறுக்கு தெருவில் உள்ள  இல்லத்தில் அவரது சகோதரர் டாக்டர் கே.எஸ்.செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. முதலாவதாக அவரது மகள் வழக்குரைஞர் எஸ்.பி.எழில்ஓவியா, தந்தையின் கொள்கை பற்று மற்றும் செயல்பாடுகளை பகிர்ந்து கொண்டார்.

பின்னர் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மறைந்த பைந்தமிழ்வேந்தன் படத்தை திறந்து வைத்து புகழ்மாலை சூட்டினார்.

நிகழ்வில்  எஸ்.கலைச்செல்வி (வாழ்விணையர்), மகன் மருத்துவர் எஸ்.பி.அருந்தமிழரசன், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.இளவரசன், துணைசெயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திக்கேயன், துணைத் தலைவர் ஜெயராமன், திருமுல்லைவாயல் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள்தாஸ்,அம்பத்தூர் பகுதி செயலாளர் அய்.சரவணன்,முகப்பேர் முரளி,இளைஞரணி எ.கண்ணன் ,வழக்குரைஞர் பன்னீர்செல்வம், புஷ்பா பன்னீர்செல்வம் அருள்விழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியாக குடும்பத்தின் சார்பாக ராஜ்மோகன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *