டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* “எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்கு வித்து வரும் பாகிஸ்தான் குறித்து உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதாரத்துடன் விளக்கும்விதமாக வெளிநாடுகள் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தொடர்பாக ஒன்றிய அரசு எங்கள் கட்சி தலைமையுடன் ஆலோசனை நடத்தவில்லை. தன்னிச்சையாக குழுக்களை ஒன்றிய அரசு நியமித்து உள்ளது. நாங்கள் விரும்பும் பிரதிநிதிகளை மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்களில் சேர்த்து கொள்ள வேண்டும்” என மம்தா காட்டம். இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இருந்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் யூசுப் பதான் விலகிவிட்டார்.
* ரூ.6200 கோடி பண மோசடி வழக்கில், யூகோ வங்கியின் மேனாள் தலைவர் சுபோத் குமார் கோயலை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில், ம.பி பா.ஜ.க அமைச்சர் விஜய் ஷாவின் மன்னிப்பை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. “முதலை கண்ணீர்” வடிக்கிறாரா என கேள்வி. இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) அமைக்கவும் உத்தரவு.
* இளங்கலை படிப்பில் ஆங்கில பாடத்திற்கான மதிப்பெண் புள்ளிகள் குறைப்பு; யு.ஜி.சி.யின் ஆணைக்கு உஸ்மானியா பல்கலைக்கழக பேராசிரியர்கள் எதிர்ப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆபரேஷன் சிந்தூர் குறித்து கருத்து தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டதற்கு எதிரான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ம.பி. பாஜக அமைச்சர் விஜய் ஷா எனது கட்சியில் இருந்திருந்தால் அவரை வாழ்நாள் முழுவதும் வெளியேற்றி இருப்பேன்: எல்ஜேபி(ஆர்வி) தலைவரும் ஒன்றிய அமைச்சருமான சிராக் பாஸ்வான் விளாசல்.
*ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் கூறியதால் எத்தனை போர் விமானங்களை இந்திய ராணுவம் இழந்துள்ளது: ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் ராகுல் காந்தி மீண்டும் கேள்வி.
– குடந்தை கருணா