தன்னை முன்னுக்குக் கொண்டு வந்தவனுக்குக் குழி தோண்டாத தமிழன் அரிதிலும் அரிது.
நன்றி விசுவாசம் காட்டுவதும், நயவஞ்சகம் செய்யாமையும், தமிழனுக்கு நஞ்சு என்று கூடச் சொல்லப்படுவதற்கும், அவை அனேகமாய் உண்மையாயிருப்பதற்கும் காரணம் என்ன?
இந்த நிலையும், குணங்களும் பார்ப்பனர்களுக் குள்ளும், முஸ்லீம்களுக்குள்ளும், ஏன் சட்டைக்கார களுக்குள்ளும் கூடச் சாதாரணமாய்க் காண்பதற்கு முடிவதில்லை என்று சொல்லப்படுகிறதே, இதற்குக் காரணம் என்ன?
இந்த மூன்று கேள்விகளிலும் உள்ள விடயங் களை சிறிது அதிகப்படுத்திக் கூறியிருப்பதாகச் சிலர் கருதலாம். அது உண்மையாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் உண்மை என்பதைப் பெரும்பான்மையோர் ஒப்புக் கொள்ளு வார்கள். ஆனால், இவைகளுக்குக் காரணம் என்ன என்று கவனிக்க வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’