தருமை ஆதினகர்த்தரின் பட்டினப்பிரவேசம் என்ற பெயரில் அவரைப் பல்லக்கில் அமரவைத்து, மனிதர்களைத் தூக்கிச் செல்லும் மனிதத்தன்மைக்கும், சுயமரியாதைக்கும் அனைவரையும்சமரசம் கருதும் அரசமைப்புச் சட்டத்துக்கும் விரோதமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் 19.5.2025 அன்று காலை 11 மணி அளவில் பேருந்து நிலையம் அருகில் அனைத்துக் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் பங்கேற்று முழக்கமிட்டனர்.
எட்டு மாவட்டங்களில் கழக
இளைஞரணி கலந்துரையாடல் கூட்டங்கள்
நாள் கிழமை மாவட்டம் நேரம்
24.05.2025 சனிக்கிழமை வட சென்னை மாலை 7 மணி
25.05.2025 ஞாயிற்றுக்கிழமை தென்சென்னை பகல் 2 மணி
25.05.2025 ஞாயிற்றுக்கிழமை தாம்பரம் மாலை 6 மணி
31.05.2025 சனிக்கிழமை திருவள்ளூர் காலை 11 மணி
31.05.2025 சனிக்கிழமை ஆவடி மாலை 4 மணி
31.05.2025 சனிக்கிழமை திருவொற்றியூர் மாலை 7 மணி
01.06.2025 ஞாயிற்றுக்கிழமை சோழிங்கநல்லூர் காலை 10 மணி
01.06.2025 ஞாயிற்றுக்கிழமை கும்மிடிப்பூண்டி மாலை 4 மணி
பொருள் : திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களைச் செயல்படுத்துதல் மற்றும் இளைஞரணி ஆக்கப்பணிகள்
குறிப்பு: இளைஞரணிப் பொறுப்பாளர்கள், மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலாளர் ஆலோசனை பெற்று கழகத்தின் அனைத்து அணியினரும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
– சோ.சுரேஷ்
(மாநில திராவிடர் கழக இளைஞரணித் துணைச் செயலாளர்)