சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வேலூர் வரும் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு கொடுக்க முடிவு

Viduthalai
2 Min Read

மாவட்ட கழகத் தோழர்கள் கலந்துரையாடலில் தீர்மானம்

வேலூர், மே 19– வேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம்  14.5.2025 அன்று மாலை 6 மணிக்கு மாவட்டத் தலைவர் வி.இ.சிவக்குமார் தலைமையில், மாவட்ட செயலாளர் உ.விசுவநாதன் முன்னிலையில் உற்சாகமாக நடைபெற்றது.

மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தலைமைச் செயற்குழுவின் தீர்மானங்களை செயலாக்குவது தொடர்பாகவும், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா நடத்த வேண்டிய அவசியத்தையும் விளக்கி கருத்துரை வழங்கினார்.

தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு

மாநில ஒருங்கிணைப்பாளர் தருமபுரி ஊமை.செஜராமன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தோழர்கள் முன்னெடுக்க வேண்டிய கடமைகளை விளக்கியும், வேலூர் வருகைதரும் நமது குடும்பத் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டும் சிறப்புரையாற்றினார்.

கழக காப்பாளர் வி.சடகோபன், மாநில ப.க.அமைப்பாளர் இர.அன்பரசன்,  பெரியார் பெருந் தொண்டர்கள் சத்துவாச்சேரி  கு.இளங்கோவன்,  வேலூர் நெ.கி சுப்பிரமணியன் பொதுக்குழு உறுப்பினர்கள் ச.கலைமணி, க.சிகாமணி, மாநகர தலைவர் சந்திரசேகரன், மாநகர செயலாளர் அ.மொ.வீரமணி, மாவட்ட ப.க. தலைவர் மருத்துவர் பழ. ஜகன் பாபு, மாவட்ட ப.க. செயலாளர் வே.வினாயகமூர்த்தி, மாவட்ட ப.க. அமைப்பாளர் கல்மடுகு. மா.அழகிரிதாசன், மாவட்ட இளைஞரணி தலைவர்  இ.தமிழ்த் தரணி, மாநகர இளைஞரணி தலைவர் பாண்டியன், மாநகர மாணவர் கழக தலைவர் பி.யுவன் சங்கர் ராஜா, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் த.சையத் அலீம், அணைக்கட்டு ஒன்றிய அமைப்பாளர் பொ.இரவீந்திரன், ப.வி.க்யுபா, ப.வி.டார்வினா, உரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், அமிர்தா, மா.திராவிட செல்வன், ஓவியர் தயாளன் உள்ளிட்ட மாநகர, இளைஞரணி, மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் கருத்துரை வழங்கினார்கள். முதலில் பவளவிழா  கண்ட பொதுக்குழு உறுப்பினர் கலைமணிக்கு பயனாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

தி.அ.முகமது சாதிக்
மறைவுக்கு இரங்கல்

வேலூர் மாவட்ட திராவிட முன்னேற்ற கழக அவைத் தலைவரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தி.அ.முகமது சகியின் தம்பி, மேனாள் துணை மேயர் வழக்குரைஞர் தி.அ.முகமது சாதிக் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது

கூட்ட முடிவுகள்

31.5.2025 அன்று காலை 10 மணிக்கு காட்பாடி மில்லீனியம் பேலஸ் அரங்கில்  சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கம் தமிழர் தலைவர் தலைமையில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

20.5.2025 அன்று புதிய கல்விக் கொள்கை, ஹிந்தி-சமஸ்கிருத திணிப்பைக் கண்டித்து இளைஞரணி மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

31.5.2025 அன்று வேலூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடத்துவதற்கு வாய்ப்பளித்த தமிழர் தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

குடும்பம் குடும்பமாக வருக!

வேலூரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் திருப்பத்தூர், திருவண்ணாமலை, இராணிப் பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டத் தோழர்கள் குடும் பத்தோடு பங்கேற்க வேண்டுமாறு இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

நிறைவாக மாவட்டக் கழக துணைச் செயலாளர் மு.சீனிவாசன் நன்றி கூறினார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *