டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*கூட்டாட்சி அமைப்பு, மாநில சுயாட்சியை பாதுகாக்க முன்வாருங்கள் எட்டு மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்: உச்சநீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை அனுப்பிய குடியரசுத் தலைவரின் குறிப்பை எதிர்க்க வலியுறுத்தல்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நீதித்துறையோ, நாடாளுமன்றமோ அல்ல, இந்திய அரசமைப்பு சட்டமே உயர்ந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய். பதவியேற்று முதன் முறையாக சொந்த மாநிலமான மகாராட்டிராவுக்கு வருகை தந்தவரை வரவேற்க மாநில தலைமை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் வராததற்கு அதிருப்தி.
தி இந்து:
* ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு அமெரிக்காவிற்கு இந்திய தூதரக பயணப் பணிக்கு தலைமை தாங்க ஒன்றிய அரசின் அழைப்பை, கட்சியின் ஒப்புதல் பெறாமல், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினரும் எம்.பி.யுமான சசி தரூர் “தீவிரமாக ஏற்றுக்கொண்டதில்” கேரள மாநில காங்கிரஸ் கட்சி அதிருப்தி.
* சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். உச்ச நீதிமன்ற இணையத்தில் தகவல்.
* “துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான சிறீஜகதீப் தன்கருக்கு 74ஆவது பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் அதே வேளையில், போராடும் விவசாயிகள் சார்பாக அவர் விடுத்த உணர்ச்சிமிக்க வேண்டுகோள்களை மோடி அரசாங்கம் தொடர்ந்து புறக்கணிப்பது மிகவும் கெட்டவாய்ப்பானது. ஆனால் முற்றிலும் ஆச்சரியமல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்,” என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பதிவு.
தி டெலிகிராப்:
* கர்னல் குரேஷியைப் பற்றி வகுப்புவாதமாகப் பேசியதற்காக உயர் நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்ட போதும், மத்தியப் பிரதேச அமைச்சர் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; ஆனால் இது குறித்து விமர்சனம் செய்த அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் மீது கைது நடவடிக்கையா? கண்டனங்கள் வலுக்கிறது.
– குடந்தை கருணா