கோவை பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் அவர் களின் அருமை மகனும், அடக்கமும், பண்பும் நிறைந்த பண்பாளரும், கொள்கையாளருமான கு.வெ.கி.ஆ.செந்தில் (வயது 61) அவர்களின் எதிர்பாராத மறைவு (17.5.2025) அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
தொடர்ந்து அவர்களின் குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் இழப்புகள் பெரும் துயரத்தை அளிக்கின்றன. பேராசிரியர் ஆசான் அவர்களது வாழ்விணையர் சாரதா மணி , மறைந்த செந்தில் ஆகியோர் அருமையாக தாம் சேமித்து வைத்த நூல்களை எல்லாம் நமது பெரியார் நூலக ஆய்வகத்திற்கு வழங்கி மகிழ்ந்தவர்கள். அடக்கம் மிகுந்த பண்பாளர், கொள்கை சீலர் செந்தில் மறைவால் பெரும் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரது வாழ்வு இணையர் சுதா, மகள் சாலினி ஆகியோருக்கும், குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கழகத் தோழர்கள் திரளாகச் சென்று இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்று கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்துவார்கள்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
18.5.2025