காஞ்சிபுரம், மே 18- காஞ்சிபுரம் மாவட்டம் பூக்கடை சத்திரத்தில் உள்ள பி.டி.வி.எஸ். மெட்ரிக் பள்ளியில் 52ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் தொடங்கி வைத்தார்.
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
இன்று (18-05-2025) காலை 9.30 மணி அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் பூக்கடை சத்திரத்தில் உள்ள பி.டி.எஸ்.மெட்ரிக் பள்ளியில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது
மாவட்ட செயலாளர் கி.இளைய வேள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட தலைவர் அ.வெ.முரளி நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம் தொடக்க உரையாற்றினார்.
மாவட்ட காப்பாளர் டி.ஏ.ஜி.அசோகன். தலைமை செயற்குழு உறுப்பினர் பு.எல்லப்பன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அ.ரேவதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் இ.ரவீந்திரன், போளூர் பன்னீர்செல்வம், இளைஞரணி அ.அருண்குமார், மு.குறளரசு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சி.வி.எம்.பி. எழிலரசன்
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பி னரும், திமுக கொள்கை பரப்பு செய லாளருமான சி.வி.எம்.பி. எழிலரசன் பயிற்சிப் பட்டறையை துவக்கி வைத்து உரையாற்றினார்.
தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் மா.அழகிரி சாமி முதலில் வகுப்பு எடுத்தார்
ஜாதி ஒழிப்பு போரில் தந்தை பெரியார் என்ற தலைப்பில் வழக்குரைஞர் சு. குமாரதேவன், சமூக நீதி வரலாறு என்ற தலைப்பில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், பார்ப்பன பண்பாட்டு படை எடுப்பு என்ற தலைப்பில் முனைவர் பா.கதிரவன், மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்வினை ஈட்டி கணேசன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள் என்ற தலைப்பில் கழக துணை பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார். தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் என்ற தலைப்பில் கழகத் துணைப்பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் தொடர்ந்து வகுப்பு எடுத்தனர். திராவிடர் கழகம் மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.