புதுச்சேரி, மே 18- புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 15-05-2025 வியாழன் மாலை 6:30 மணியளவில் புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.
கடவுள் மறுப்பு
மாவட்டக் கழகச் செயலாளர் தி. இராசா கடவுள் மறுப்பு உறுதி மொழிக்கூறி கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
மாவட்டக் கழகத் தலைவர் வே. அன்பரசன் கூட்டத்தின் நோக்கமும் நடைபெற இருக்கின்ற கருத்தரங்கம் புதுச்சேரியில் உள்ள ஆனந்தா இன் குளிரூட்டப்பட்ட மாநாட்டரங்கில் நடைபெறவுள்ளதால் அதற்கு தேவையான செலவுகளையும் அதற்குரிய முன் ஏற்பாடுகள், துண்டறிக்கை உள்ளிட்ட செய்திகளையும் தெளிவாக எடுத்துக் கூறி அதற்கு தக்கவாறு தோழர்கள் கருத்துரை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தலைமை உரையாற்றினார். அதில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தலைமை செயற்குழுவின் செயல்திட்டங்கள் பற்றியும் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் உடல்நிலை குறித்தும் அவரின் கனவுத் திட்டமான பெரியார் உலகம் பற்றியும் எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து மாநிலப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைப் பொதுச் செயலாளர் வி.இளவரசி சங்கர், மாவட்டக் கழகத் துணைத் தலைவர் மு. குப்புசாமி, மாவட்டக் கழகச் செயலாளர் தி. இராசா, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ. நடராசன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், கே. குமார், நகராட்சி கழகப் பொறுப்பாளர்கள் மு. ஆறுமுகம், எஸ். கிருஷ்ணசாமி, பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பா.குமரன் மாணவர் கழகத் தலைவர் பெ. அறிவுச்செல்வன், மாணவர் கழகச் செயலாளர் சபீர் முகமது, எஸ்.சக்திவேல் உள்ளிட்டோர் கருத்துகளை கூறினர் . நிகழ்ச்சிக்கு தங்களால் இயன்ற பொருளுதவியும் தருவதாக உறுதி அளித்தார்கள்.
இறுதியாக திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் .துரை. சந்திரசேகரன் இன்றைய காலகட்டத்தில் திராவிடர் கழகம் என்ன செய்கிறது, அதன் செயல்பாடுகள் பற்றியும், அமைப்பு தற்பொழுது இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் பகுத்தறிவாளர் கழக , நாத்திக மாநாடுகள் மற்றும் திராவிடர் கழகச் செயல்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.
புதுச்சேரி மாநிலப் பொறுப் பாளர்கள் மற்றும் தோழர்களிடம் கழகத் தலைவர் ஆசிரியர் வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் அனைவரும் ஒற்றுமையோடு இணைந்து, இந்த நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்க நிகழ்ச்சியை சிறப்பாக செய்து தரும்படி கேட்டுக்கொண்டார் .
இறுதியில் விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவராசன் நன்றி கூறினார்
நிகழ்ச்சியில் வில்லியனூர் கொம்யூன் கழகச் செயலாளர் இரா. சுந்தர், பி. சண்முகம், யமுனா சக்திவேல், இளைஞரணித் தலைவர் சா சித்தார்த், பெரியார் பிஞ்சுகள் யாழினி, காமினி உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் கலந்து கொண்டனர்.