சென்னை, மே 18- கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பலருக்கும் ஜூன் மாதம் பணம் வழங்கப்பட உள்ளது. கூடுதல் பயனாளிகள் அடுத்த மாதம் முதல் சேர்க்கப்பட உள்ளனர்.இதில் அரசு தந்த வீடுகளிலும் வசிப்பவர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது அரசின் திட்டங்களின் கீழ் வீடுகளை பெற்ற பலரும் இந்த திட்டத்தின் கீழ் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு விண்ணப்பம் செய்ய முடியும். அரசு வீடுகளில் இருப்பவர்கள், அது அரசு ஊழியர் களுக்கான குடியிருப்பாக இல்லாத பட்சத்தில், அவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கத்தில் இந்த முறை புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
குடும்ப அட்டை
கடந்த முறை விரிவாக்கத்தின் போது புதிதாக குடும்ப அட்டை பெற்ற பலருக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ரூ.1000 பணம் பெறுவதற்காக இவர்கள் புதிதாக குடும்ப அட்டை பெறுகிறார்கள் என்று கூறி அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான அடுத்த கட்ட பயனாளிகள் சேர்ப்பு ஜூன் 4ஆம் தேதி நடக்க உள்ளது. தமிழ்நாடு முழுக்க இதற்காக முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. மொத்தமாக 9000 இடங்களில் இதற்காக முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் தற்போது 1 கோடியே 25 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நேரடியாக பயன் பெற்று வருகின்றனர். இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். அதன்படி கூடுதலாக 10 – 15 லட்சம் பேர் வரை இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட உள்ளனர். அதன்படி இந்த பயனாளிகள் எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது.
தளர்வுகள் வருகிறது
மகளிர் உரிமை தொகை திட்டம் ஜூன் மாதம் விரிவாக்கம் செய்யப்படும் போது அதில் கூடுதல் தளர்வுகள் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இப்போது இருக்கும் கட்டுப்பாடுகள் குறைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
இப்போது உள்ள விதி என்ன?
மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படும். ஆனால் இதற்காக குடும்ப அட்டை உள்ள எல்லோருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பணம் தரப்படாது. மாறாக விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங் களையும் பரிசீலித்து, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும்.
தகுதி இல்லாதவர்களுக்கு பணம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒரே வீட்டில் 2 பெண்கள் இருந்தால் அவர்கள் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாமா என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு விதிகள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இதனால் பலரும் தங்கள் குடும்ப அட்டைகளில் மாற்றங்களை செய்ய தொடங்கி உள்ளனர். உதாரணமாக உங்கள் வீட்டில் ஒரு பாட்டி இருக்கலாம். அவர் ஓய்வூதியம் வாங்கலாம்.
இதனால் வீட்டில் உள்ள மருமகளுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்காமல் போகலாம் என்ற அச்சம் ஏற்படலாம். இதனால் பலர் வீடுகளில் பாட்டிகளின் பெயர்களை குடும்ப அட்டைகளில் இருந்து நீக்கத் தொடங்கி உள்ளனர்.
ஆனால் உங்கள் வீட்டில் எத்தனை பெண்கள் அரசின் ஓய்வூதியம் வாங்கினாலும் பிரச்சினை இல்லை. அந்த குடும்ப அட்டையில் குடும்ப தலைவி யாரோ அவருக்கே மகளிர் உரிமை தொகை வழங்க முடியும்.
அவர்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் ஓய்வூதியம் பெறக்கூடாது. அதாவது குடும்ப தலைவியாக இருப்பவர் ஓய்வூதியம் பெறக் கூடாது.
அதேபோல் அவர்களின் கணவர் அரசு வேலை செய்ய கூடாது. மற்றபடி ஒரே வீட்டில் பல பெண்கள் இருந்தாலும் அவர்கள் எல்லாம் ஓய்வூதியம் பெற்றாலும் குடும்ப தலைவி என்ற பெயரில் உள்ள பெண்ணுக்கு வழங்கப்படும்.