சென்னை, மே 17– இன்று (17-05-2025) காலை 9.30 மணி அளவில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் செல்வ மஹால் திருமண மண்டபத்தில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சி பட்டறை தொடங்கி எழுச்சியுடன் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டத் துணைச் செயலாளர் கரு. அண்ணாமலை நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட கழக தலைவர் இரா.வில்வநாதன் நோக்க உரையாற்றினார்.
கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
பொதுக்குழு உறுப்பினர் கோவி. ராகவன், பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் பு.அய்யாதுரை, மாவட்ட காப்பாளர் மதியழகன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், மாவட்ட துணை தலைவர் மு.சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அன்பு, மாவட்ட இளைஞரணி தலைவர் மணித்துரை, மாவட்ட இளைஞரணி செயலாளர் யுவராஜ், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மகேந்திரன். வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை.அன்புச்செல்வன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம் வாழ்த்துரையாற்றினார். பார்ப்பன பண்பாட்டு படை எடுப்பு என்ற தலைப்பில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் முதல் வகுப்பு எடுத்தார்.
தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் அழகிரிசாமி அவர்களும், சமூக நீதி வரலாறு என்ற தலைப்பில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களும், சுயமரியாதை இயக்கம் என்ற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் சாதனைகள் என்ற தலைப்பில் மஞ்சை.வசந்தன் அவர்களும், தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் என்ற தலைப்பில் கழகத் துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சுஎன்னாரெசுபெரியார் அவர்களும் ஜாதி ஒழிப்பு போரில் தந்தை பெரியார் என்ற தலைப்பில் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் அவர்களும் தொடர்ந்து வகுப்பெடுத்தனர்
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சி பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.
தென்சென்னை பெரியாரியல் பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டு சிறப்பித்த மாணவ-மாணவிகள் மொத்தம் 102.
இதில் பெண்கள் பள்ளி படிப்பு- 33, பெண்கள் கல்லூரி படிப்பு – 12, மொத்தம் – 45 பெண்கள்.
ஆண்கள் பள்ளிப்படிப்பு – 31, ஆண்கள் கல்லுரி படிப்பு- 26, மொத்தம்: 57 ஆண்கள்.