12 ஆம் வகுப்புத் தேர்வில் ஆதிதிராவிடர் – பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி உயர்வு!

Viduthalai
2 Min Read

இதுதான் சமூக நீதியின் வெற்றி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை, மே 17– தமிழ்நாட்டில் மே 8ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்து 95.03 சதவிகித மாணவ – மாணவியர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியின மாணவ – மாணவியர் 96 சதவிகிதம் தேர்ச்சி பெற்று புதிய சாதனை படைத்துள்ளனர்.

இந்தச் சாதனையானது, கல்வி யில் சமூக நீதிக்கான வெற்றி என்று குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி முதல மைச்சர் மு.கஸ்டாலின் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்குவாழ்த்து தெரி வித்துள்ளார். தமிழ்நாட்டில் பன்னி ரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 96 சதவிகிதத்தை அடைந்து புதிய சாதனைபடைத்துள்ளது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சமூக வலைதளப் பதிவு வருமாறு:–

கல்வியில்சமூகநீதிக்கான வெற்றி இது! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. உயர்கல்வியிலும் இந்த உயரத்தை உறுதிசெய்து வருகி றோம்!

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக நமது திராவிடமாடல் அரசு தீட்டும் திட்டங்களால் வரலாற்றில் இடம் பெறும்!

இவ்வாறு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாழ்த்து!

தொடர்ந்து 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு:–

10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற வர்கள், உங்கள் கல்லூரி இலக்குக்குத் தேவையான பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள்!

பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்று பன்னி ரண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற வாழ்த்துகள்!

இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்தடுத்த தேர்வுகள் உள்ளன; அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தேர்ச்சி பெறுங்கள்; கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *