நம்மிலே ஒரு கூட்டத்தாரைக் கடவுளின் பேரால் பொட்டுக் கட்டி விட்டு விலைமாதராக ஆக்கி விட்டார்கள். எங்கள் முயற்சி காரணமாகவே – இது அவமானம் ஒழிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் எடுத்துச் சொன்ன பிறகுதானே – அந்த ஜாதியாளே இழிவு என்று உணர்ந்தார்களேயன்றி தன்னறிவின்படி தானாகவே உணர்ந்தார்களென்று கூறமுடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’