13.11.2023
டைம்ஸ் ஆப் இந்தியா:
👉திமுக எம்.பி.யும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான ஆ.ராசா, ஸநாதன தர்மம் குறித்து பேசியதற்காக கோ வா ரன்டோ ரிட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் – தான் கூறிய கருத்துகள் எந்த வகையிலும் அரசமைப்பிற்கு முரணானவை அல்ல, “சட்டவிரோத நடைமுறைகளை” விமர்சிப்பதும் கண்டனம் செய்வதும் ஒரு பொது ஊழியராக தனது கடமை என்றும் தனது பதில் மனுவில் வாதிட்டுள்ளார்.
👉சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பெண் களுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்: முதலமைச்சர் பூபேஷ் பாகேல் உறுதி.
👉 தெற்கு மண்டலத்தில் உள்ள 4 அய்.அய்.டி.களில் சேர்ந்தவர்களில் பெண்கள் 26 சதவீதம். இந்திய சராசரி 19 சதவீதம் ஆகும்.
👉சமூகத்தில் நிலவும் பொருளாதாரப் பிளவைக் கடந்தும் இட ஒதுக்கீடு போராட்டம் மராத்தியர்களை ஒருங்கிணைத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு கடும் நெருக்கடியைத் தந்துள்ளது.
தி டெலிகிராப்:
👉 புதிய சமூக-பொருளாதார ஜாதிக் கணக்கெடுப்பு தொடர்பான கேள்விகளை மோடி அரசு, 2011 சமூக பொருளாதார சர்வே மூலம் சேகரிக்கப்பட்ட பொருளா தாரத் தரவை வெளியிடும் போது பிழைகள் மற்றும் நகல்களை மேற்கோள் காட்டி ஜாதித் தரவுகளை வெளியிடுவதைத் தவிர்க்கிறது.
– குடந்தை கருணா