சென்னை, மே. 16- துணைவேந்தர் நியமன விவகாரம் பேருரு எடுத்த நிலையில், அதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு துணைவேந்தர் நியமனம் குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் ஏற்கெனவே துணைவேந்தரை நியமிப்பதற்காக அமைக்கப்பட்ட தேடுதல் குழு அறிவிப்பாணையில் சில திருத்தங் களை கொண்டுவந்து உயர்கல்வித் துறை அரசிதழ் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை செயலாளர் சமயமூர்த்தி வெளியிட் டுள்ள அரசிதழில் கூறப்பட்டு இருப்ப தாவது:-
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் களை நியமிப்பதற்கான தேடுதல் குழு குறித்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. தற்போது அந்த அறிவிப்பாணையில் சில திருத் தங்களை கொண்டு வந்து அதற்கான அரசிதழ் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த திருத்தங்களின் விவரம் வருமாறு:-
அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பாக உயர்கல்வித்துறையில் வெளியிட்ட அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஆளுநர்-வேந்தர்’ என்ற வார்த்தை நீக்கப்பட வேண்டும். வேந்தரின் நியமனதாரர் அல்லது ஒருங்கிணைப்பாளர் என்ற வார்த்தைக்கு பதிலாக வேந்தரின் நியமனதாரர் அல்லது உறுப்பினர் என்று சேர்க்கப்பட வேண்டும். மேலும் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் ‘ஆளுநர்-வேந்தர்’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘அரசு’ என்ற வார்த்தை சேர்க்கப்பட வேண்டும்.
இதுபோன்ற திருத்தங்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவை தொடர் பாக உயர் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பாணையிலும் மேற்கொள் ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.