அரூர், மே 16– அரூர் கழக மாவட்டத்தில் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதிக்குள்ளாக 5 இடங்களில் கழகக் கூட்டங்களை நடத்தி வழிகாட்டி உள்ளது.
ஏப்ரல் 13ஆம் தேதி இளைஞர் அணி, மாணவர் கழக சார்பில் சார்பில் வெங்கடாசமுத்திரம் 4 வழிச்சாலை சந்திப்பில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் கழக தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அ.தமிழ்ச்செல்வன் நூல்களை வெளியிட்டார், மாவட்ட இளைஞர் அணி தலைவர் த.மு. திலீபன், கழக சொற்பொழிவாளர் மழவை சு.தமிழமுதன், மாரி கருணா நிதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
20.4.2025ஆம் தேதி பாப்பிரெட் டிப்பட்டி ஒன்றியம் பயர்நத்தம் கிராமத்தில் அண்ணல் அம் பேத்கர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா தெருமுனை கூட்டம் ஒன்றிய தலைவர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது, நிகழ்ச்சியில், கழக சொற்பொழிவாளர் மழவை தமிழமுதன், த.மு.யாழ்திலீபன், மாரி கருணாநிதி, ஆகியோர் சிறப்புரையாற்றினர், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி , மாவட்டத் தலைவர் அ.தமிழ்செல்வன் ஆகியோர் ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர்.
ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டகர அள்ளியில்யில் பகுத்தறிவாளர் கழகம், விடுதலை வாசகர் வட்டத் தின் சார்பில் நடைபெற்ற அண் ணல் அம்பேத்கர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கழக சொற்பொழிவாளர் மழவை தமிழமுதன் கலந்து கொண்டு பேசினார். தமிழ்ச்செல்வன் யார் திலீபன் சமரசம் பிரதாப், ஆனந்தன், அண்ணாமலை, சிங்காரவேலு உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
27.4.2025ஆம் தேதி கடத்தூர் ஒன்றியம் கிராமிய பட்டியில் இளைஞர் அணி மாணவர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம், நடைபெற்றது நிகழ்ச்சியில் தலைமைக் கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், கழக சொற்பொழிவாளர் த.மு.யாழ் திலீபன், திமுக இளைஞரணி பொறுப்பாளர் சுஜித் ஆகி யோர் கலந்து கொண்டு சொற் பொழிவாற்றினர்.
10.5.2025ஆம் தேதி கடத்தூரில் மாவட்ட கழக சார்பில் மாவட்ட கழக தலைவர் ஆர் தமிழ்ச்செல்வன் தலைமையில் கழகக் கொள்கை பிரச்சார பொதுக்கூட்டம், மறைந்த சுயமரியாதைச் சுட ரொளி முனைவர் சிந்தை மு. இராஜேந்திரன் படத்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அரூர் சா.ராஜேந்திரன் திறந்து வைத்தார், கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் தொடக்க உரையாற்றினார், மாரி கருணாநிதி, யாழ்திலீபன், தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் கருத்துரை ஆற்றினர். கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் வருகிற 22.5.2025 தேதி மொரப்பூரிலும், 23.5.2025ஆம் அம்மாபேட்டையிலும் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தஞ்சை இரா. பெரியார் செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.