தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான இந்திய உச்ச நீதிமன்ற அமர்வு கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர், வக்பு (திருத்த) சட்டம், 2025 இன் விதிகளைத் தடுத்து நிறுத்துவதற்கான இடைக்கால உத்தரவுக்கு ஆதரவாகவும் எதிராக வும் வாதங்களைக் கேட்க மே 20 ஆம் தேதி முழு நாளையும் ஒதுக்க முடிவு செய்துள்ளனர்.
***
‘நீட்’ யு.ஜி. தேர்வு முடிவுகளுக்கு தற்காலிகத் தடை
மத்திய பிரதேசத்தில் ஒரு தேர்வு மய்யத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது தொடர்பான சர்ச்சை காரணமாக தேர்வு முடிவுகளை அறிவிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டது – மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம். மே 13 அன்று நீதிமன்றம் இந்த விஷயத்தில் அறிவுறுத்தல்களை எடுக்க உத்தரவிட்ட போதிலும், பிரதிவாதிகள் (தேசிய தேர்வு நிறுவனம் அல்லது இந்திய ஒன்றியம் ) சார்பாக எந்த பிரதிநிதிகளும் ஆஜராகவில்லை என்று நீதிபதி சுபோத் அபயங்கர் அமர்வு தனது இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டது.