சமூக நீதிக்கு எதிராக ஒன்றிய அரசு மேற் கொண்டு வரும் சட்டங்களும், நடவடிக்கை களும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பேராபத்தாகவே உள்ளது.
ஜாதியின் காரணமாக கல்வி மறுக்கப்பட்ட பெரும்பாண்மை மக்களின் கண்களை திறந்து விட்டதிலும் கை கொடுத்து தூக்கி விட்டதிலும் இட ஒதுக்கீட்டிற்கு முக்கிய பங்களிப்பு உண்டு.
இட ஒதுக்கீட்டின் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், சிறுபான்மையினரும் கல்வி கண்ணொளி பெற்று எழுந்து நடமாடும் நிலையில் நேரடியாக இவற்றில் கை வைக்க முடியாது. என்ற நிலையில் பார்ப்பனீயத்திற்கே உரித்தான நயவஞ்சகத் தன்மையோடு…
“நீட்” என்றும் – பொருளாதார அளவுகோல் (EWS) என்றும் கொல்லைப்புற வழியை தேர்ந்தெ டுத்து சமூகநீதிக்கு எதிராக குறிப்பிட்ட கல்வி யில், வேலைவாய்ப்பு துறைகளில் இட ஒதுக்கீடு கிடையாது என்ற நிலையை ஏற்படுத்தி வருகிறார்கள்.
தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக் கிறார்கள். இவற்றை நாம் ஒருங்கிணைந்து முறியடிக்காவிட்டால் மீண்டும் பார்ப்பனரல் லாதமக்கள் பார்ப்பனீய ஆதிக்கம் என்ற யானையின் காலில் மிதிப்பட்டு நசுங்க வேண் டிய அவல நிலைதான் ஏற்படும் என்பதில் அய்யமில்லை.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் மே 20ஆம் தேதி நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் சூறையாடப்படும் ஆபத்தி லிருந்து அவர்களை காக்கும் கடமையும், அக்கறையும் உள்ள பெற்றோர்கள்,இளைஞர்கள், மாணவர்கள், மகளிர்கள் கட்சி, மதம், ஜாதிகளுக்கு அப்பாற் பட்டு பெருந்திரளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன குரல் எழுப்புவோம் வாரீர்! வாரீர்!! (20.5.2025)
ஏற்பாடு : திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை