திருப்பத்தூர், ஜூன் 29 – திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் கைப்பந்து போட்டி. கந்திலி ஒன்றியம் இலக்கிநாயக்கன்பட்டி கிளை திராவிடர் கழக தலைவர் மா.சரவணன் மற்றும் இலக்கி நாயக்கன்பட்டி செயலாளர் சி.லட்சுமணன் ஆகியோரின் சீரிய முயற்சியால் இலக்நாயக்கன் பட்டி கிராமத்தில் 24, 25.6.2023 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இக்கைப்பந்தாட்ட போட்டியில் மாவட்ட அளவில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டன.
முதல் பரிசு : 15,000,
இரண்டாம் பரிசு : 10,000
மூன்றாம் பரிசு : 5,000
என பல்வேறு பரிசுகளும், பதக்கங்களும் வெற்றி பெற்றவர் களுக்கு வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் திராவிடர் கழ கம் சார்பில் சிறப்பு அழைப்பா ளராக திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், கிருஷ்ணகிரி மாவட்ட மகளிரணி தலைவர் இந்திரா காந்தி, மாவட்ட செயலாளர் பெ. கலைவாணன், கந்திலி ஒன்றிய தலைவர் பெ.ரா.கனகராஜ், சோலையார்பேட்டை ஒன்றிய செயலாளர் கோ.இரா ஜேந்திரன், நகர அமைப்பாளர் க. முருகன் மற்றும் கழக தோழர் கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இக் கைப்பந்தாட்ட போட் டியை சிறப்பாக ஏற்பாடு செய்த கழக தோழர்கள் சரவணன் மற் றும் லட்சுமணன் ஆகியோருக்கு திருப்பத்தூர் மாவட்ட திரா விடர் கழகம் சார்பில் பாராட்டு களும், வாழ்த்துக்களும் தெரிவிக் கப்பட்டது. தந்தை பெரியாரின் தத்துவங்களை பல்வேறு வகை யில் எடுத்து செல்லும் விதமாக இது போன்ற விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும்.