சென்னை, மே 15 ராமநாதபுரத்தில், நேரிட்ட விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர் சமய ரித்திஷ் நல்ல மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்து பிளஸ் 2 பொதுத் தோ்வு காலத்தில் விபத்தில் சிக்கி ஆம்புலன்ஸில் வந்து தேர்வெழுதிய மாணவர் சமய ரித்திஷ் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள மருத்துவமனையிலிருந்து பள்ளிக்கு வந்திருந்தார். தற்போது சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600-க்கு 565 மதிப்பெண்கள் பெற்று அசத்தியிருக்கிறார். எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமய ரித்திஷ், தேர்வு மய்யத்துக்கு ஆம்புலன்ஸில் வந்து தேர்வெழுதிச் சென்றார். இந்த நிலையிலும் நன்கு படித்து பிளஸ் 2 தேர்வில் 565 மதிப்பெண்கள் எடுத் துள்ளார். அவருக்கு பள்ளி சார்பிலும் உடன் படித்த மாணவர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.