அதிகபட்சமாக ஈரோட்டில் 106.16 டிகிரி பதிவு
சென்னை, மே.15– தமிழ்நாட்டில் 12 இடங்களில் நேற்று (14.5.2025) வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 106.16 டிகிரி வெப்பம் பதிவானது. 100 டிகிரியை கடந்து வெயில் பதிவான இடங்கள் வருமாறு:-
ஈரோடு -106.16 டிகிரி (41.2 செல்சியஸ்)
திருச்சி -104.9 டிகிரி (40.5 செல்சியஸ்)
கரூர் -104.9 டிகிரி (40.5 செல்சியஸ்)
வேலூர் -104.36 டிகிரி (40.2 செல்சியஸ்)
திருத்தணி -104.18 (40.1 செல்சியஸ் )
பரங்கிப்பேட்டை – 104 டிகிரி (40 செல்சியஸ்)
மதுரை விமான நிலையம் – 104 டிகிரி (40 செல்சியஸ்)
பாளையங்கோட்டை -103.82 டிகிரி (39.9 செல்சியஸ்)
மதுரை நகரம் -103.28 டிகிரி (39.6 செல்சியஸ்)
தஞ்சாவூர் -102.2 டிகிரி (39 செல்சியஸ்)
சேலம் -101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)
சென்னை மீனம்பாக்கம் -100.4 டிகிரி (37.8 செல்சியஸ்)
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு
சேலம், மே 15 ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் கடந்த 11-ஆம் தேதி விநாடிக்கு 1,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து 12-ஆம் தேதி காலை 1,200 கனஅடியாகவும், 13-ஆம் தேதி காலை 700 கனஅடியாகவும் குறைந்தது. இந்நிலையில், நேற்று (14.5.2025) காலை நீர்வரத்து விநாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனிடையே, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 714 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று (13.5.2025) 390 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 108.06 அடியாகவும், நீர்இருப்பு 75.68 டிஎம்சியாகவும் இருந்தது.