இந்திய கல்வித் திட்டத்தில் 12ஆம் வகுப்பு மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. இதற்கு பிறகு தான் ஒருவர் என்ன வகையான கல்வியை கற்கப் போகிறோம் என்பதை முடிவு செய்கின்றார்.
10ஆம் வகுப்பிற்கு பிறகு 12ஆம் வகுப்பில் நாம் எடுத்துப்படிக்கும் பிரிவு நம்முடைய கல்லூரி படிப்பில் எத்தகைய பாடத்தை படிக்கிறோம் என்பதை முடிவு செய்கிறது.
இருப்பினும் இதுவே இறுதியான முடிவல்ல. 12ஆம் வகுப்பிற்கு பிறகு நாம் தேர்ந்தெடுக்கின்ற கல்வி தான் நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது எனலாம். எனவே 12ஆம் வகுப்பிற்கு பிறகு நாம் என்ன வகையான கல்வியை தேர்ந்தெ டுக்கப்போகிறோம் என்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டி யுள்ளது. பட்டப்படிப்பில் எந்த வகை யான கல்வியை தேர்ந்தெ டுக்கலாம் என்பதைப் பற்றி இக்கட்டு ரையில் பார்ப்போம்.
கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகள்
பி.ஏ. எனும் Bachelor of Arts பிரிவில் ஆண்ட்ரோபொலஜி, பொருளாதாரம், கணிணி அறிவியல், அயல்நாட்டு வியா பார நிர்வாகம், வரலாறு, ஜர்னலிசம், புவியியல், சுற்றுலா நிர்வாகம், மொழி வரலாறு மற்றும் இலக்கியம், மனித உரிமை கல்வி, வெளியுறவு கொள்கை, உடற்கல்வி உளவியல், தத்துவயியல், அரசியல் அறிவியல் பாடபிரிவுகள் இளங்கலை பிரிவில் உள்ளன.
பி.எஸ்.சி என்ற இளங்கலை
அறிவியலியல், வேளாண்மை, அனி மேஷன், உயிர் வேதியியல், உயிரியல், பயோடெக்னாலஜி, தாவரவியல், சுற்றுச்சூழல் அறிவியல், தகவல் தொழில்நுட்பம், நூலக அறிவியல், நுண்ணுயிரியல், அனிமேஷன் & விஷ்வல் எப்பக்ஸ், பொருளாதாரம், ஹோட்டல் நிர்வாகம், கணிதம், வேதியியல், தாவரவியல், உணவு அறிவியல் மற்றும் பதப்படுத்துதல், அச்சு தொழில்நுட்பம், தொழிற்சாலை வேதியியல், சமூக அறிவியல், சமூக வியல் போன்ற பல்வேறு பாடப் பிரிவு கள் உள்ளன.
மருத்துவத் துறையில் உள்ள படிப்புகள்
மருத்துவ துறையில் மருத்துவர் முதல் ஆய்வக உதவியாளர் வரையிலான எண்ணற்ற பட்டப்படிப்புகள் உள்ளன. பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஓமியோபதி மருத்துவம், யுனானி மருத்துவம், இயற்கை மற்றும் யோகா மருத்துவம் போன்றவற்றில் மருத்துவர் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
அத்துடன் B.P.T. என்கின்ற இயன்முறை மருத்துவம், பி.ஆப்ட் என்கின்ற கண் மருத்துவ உதவியாளர் படிப்புகள் மருத்துவர்க்கு இணையான படிப்புகளாக விளங்குகின்றன.
மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆய்வக படிப்புகள்
ஆய்வக தொழில்நுட்பம், கதிரியக்க மருத்துவம், புனர்வாழ்வு சிகிச்சை, தொழில் ரீதியான சிகிச்சை, நர்சிங், இதய கருவி தொழிற்நுட்பம், அவசர கால உதவி தொழிற்நுட்பம், ஊட்டச்சத்து உணவு, ரீனல் டைலசிஸ் தொழில் நுட்பம், பேச்சுத்திறன் மற்றும் அறுவை அரங்கு உதவியாளர் போன்றவற்றிற்கு மருத்துவ துணைப்படிப்புகள் உள்ளன. இவை அனைத்தும் மூன்றாண்டு பட்டப்படிப்பு மற்றும் இரண்டாண்டு பட்டயப்படிப்பாகவும் வழங்கப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், கல்வி நிலையங்கள் இப்பாடப் பிரிவுகளை நடத்தி பட்டமும், சில தனியார் மருத்துவமனை அங்கேயே பணியையும் வழங்குகின்றன என்பது ஒரு சிறப்பு அம்சமாகும்.
வணிக மற்றும் வர்த்தகம்
பி.காம் பிரிவில் கணக்கியல், கணக்கு மற்றும் வரி வசூல், வங்கி மற்றும் நிர்வாகம், வணிக நிர்வாகம், தொழில்முனைவோர் வளர்ச்சி மற்றும் வர்த்தக தகவல், ஏற்றுமதி நிர்வாகம், மனித வள மேம்பாடு, தொழிலக நிர்வாகம், சுற்றுலா மற்றும் போக்குவரத்து நிர்வாகம் போன்ற பட்டப்படிப்புகளை பயின்றால் நிதி மற்றும் நிர்வாகத்துறையிலும், வணிகத் துறையிலும் பணிபுரியலாம். என்றும் நல்ல எதிர்காலம் உள்ள துறை.
மேலாண்மை சார்ந்த பட்டப் படிப்புகள்
இளங்கலை வணிக மேலாண்மை (BBM), இளங்கலை வணிக கல்வி (BBS), இளங்கலை பன்னாட்டு வணிகம் மற்றும் நிதி (BIBF). BBA-வில் கணக்கியல் மற்றும் நிதி, வங்கி மற்றும் நிதி, மார்க்கெட்டிங் அண்ட் பினான்ஸ், வங்கியியல் போன்ற பாடப்பிரிவுகளை பயின்றால் வங்கிகளில் சிறந்த நிர்வாகி யாக தொழிலகங்களில் நிர்வாகியாக பணிபுரியலாம்.
சட்டம் சார்ந்த பட்டப்படிப்புகள்
B.A.L.L.B மற்றும் LLB, B.L. BGL போன்ற பட்டப்படிப்புகளும், குறிப்பிட்ட சில துறை சட்ட நுணுக்கம் கற்று தரும் பட்டயப் படிப்புகளும் உள்ளன. வர்த்தக சட்டம், கூட்டுறவு சட்டம், பன்னாட்டு சட்டம், தொழிலாளர் சட்டம் போன்றவாறு பல துறை சட்டம் சார்ந்த பட்டயப் படிப்புகள் உள்ளன.
பொறியியல் பட்டப்படிப்புகள்
வானூர்தி பொறியியல், விவசாய பொறியியல், தானியங்கி பொறியியல், இரசாயன பொறியியல், கணினி பொறியியல், கடல் சார் பொறியியல், சுரங்க பொறியியல், பெட்ரோலிய பொறியியல், தகவல் தொழில் நுட்பம், ஆடை வடிவமைப்பு, தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு, எலக்டிரிக்கல் & எலக்ட்ரானிக் வானவியல் பொறியியல் போன்ற பல துறையில் பொறியியல் பட்டப்படிப்புகள் உள் ளன.
இது தவிர இன்னும் ஏராளமான கல்வி பிரிவு கொண்ட பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகள் உள்ளன. தேவையான பாடப்பிரிவை தேர்ந்தெ டுத்து படிக்கலாம்.