ஜெயங்கொண்டம், மே 15- 14.5.2025 அன்று ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் வீ.அன்புராஜ் 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வி.விஜய லாவண்யா 585/600,
ஜி.லாவண்யா 578/600, கே.அமுதன் 575/600 ஆகியோரையும், 100% தேர்ச்சியை அளித்த ஆசிரி யர்களையும் பாராட்டி ஊக்கத் தொகை வழங்கி மாணவர்களின் மேற்படிப்பிற்கு தேவையான உதவி களையும் செய்வதாக தெரிவித்தார். மேலும் அதிகப்படியான தேர்ச்சி விழுக்காடு வழங்கிய பள்ளியின் முதல்வர் அவர்களை பாராட்டி பயனாடை அணிவித்து சிறப்பித்தார். கற்றல் கற்பித்தல் சிறந்து விளங்க செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தை ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்தார்.
தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி விஜய லாவண்யா எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை பெரியார் பள்ளியில் படித்தது தனக்கு பெருமையாக உள்ளதாகவும் முதல் மதிப்பெண் பெற ஊக்கமளித்த பள்ளியின் முதல்வர், பெரியார் கல்வி நிறுவனங் களின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மற்றும் படிப்பதற்கு அனைத்து வசதிகளையும் அளித்த தாளாளர் அன்புராஜிக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடந்த செயற்கை நுண்ணறிவு பற்றிய பயிற்சி வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அது மட்டுமின்றி மேற்படிப்பிற்கான பல்வேறு துறைகளைப் பற்றி நடத்திய வழிகாட்டுதல் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது அந்த அரியவாய்ப்பை அளித்த தாளாளருக்கு நன்றியைத் தெரிவித்தார் .
நமது பெரியார் கல்வி நிறுவனம் என்பது படிப்பு விளையாட்டு மற்றும் நல்லொழுக்கத்தையும் கற்றுத் தரும் இடமாக திகழ்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொண்டதோடு, இந்த நிகழ்வின் மூலமாக எமது ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் அர்ப்பணிப்பை பாராட்டிய தாளாளர் அன்புராஜ் மற்றும் பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமாரையும் பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.