கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
3 Min Read

15.5.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* உச்ச நீதிமன்றத்தின் 52ஆவது புதிய நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். வரும் நவம்பர் 23ஆம் தேதி வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவி வகிப்பார். பதவி ஏற்றதும், ஜெய்பீம் என்று முழக்கமிட்டார்.

* பொள்ளாச்சி பாலியல் வழக்கைப் போல கொடநாடு கொலை வழக்கிலும் உரிய தண்டனை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.

*திராவிட மாடல் அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தால், அய்.அய்.டி., அய்.அய்.எம். உள்ளிட்ட உயர் கல்வியில் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அறுபது ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 96 விழுக்காட்டை எட்டியுள்ளது என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்

*கோவிட்-19 சாவு எண்ணிக்கை குறைத்து காண்பிக்கப்பட்டது குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா விளக்கம் அளிக்க ஜான் பிரிட்டாஸ் எம்.பி., வலியுறுத்தல்.

*கனடா வாழ் இந்தியர்கள் அனிதா ஆனந்த், வெளியுறவு அமைச்சராகவும், மனிந்தர் சித்து, பன்னாட்டு வர்த்தக அமைச்சராகவும், கனடா  நாட்டின் பிரதமர் மார்க் சியோனி நியமித்தார்.

* உயர்கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு 11.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க ஒடிசா அமைச்சரவை அறிவிப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

* ‘புற்றுநோய் போன்றது, ஆபத்தானது’, என்று கூறிய மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், கர்னல் சோபியா குரேஷியை “பயங்கரவாதிகளின் சகோதரி” என்று குறிப்பிட்டு கருத்து தெரிவித்ததற்காக, பா.ஜ.க தலைவரும் மாநில அமைச்சருமான குன்வர் விஜய்ஷா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

* ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு குறித்து பிரதமரின் ‘அமைதியை’ அம்பலப்படுத்த  நாடு முழுவதும் காங்கிரஸ் பேரணி நடத்த முடிவு.

* பீகாரில் ராகுல்: சிக்ஷா நியாய் சம்வாத் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து, ராகுல் தர்பங்காவில் ஓபிசி,
எம்.பி.சி., எஸ்.சி.  மற்றும் சிறுபான்மை மாணவர் களுடன் உரையாடுவார்; இந்தக் குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுடன் சேர்ந்து, பாட்னாவில் “பூலே” படத்தையும் அவர் பார்ப்பார்.

* மராத்தா இடஒதுக்கீடு: மனுக்களை விரைவாக விசாரிக்க புதிய அமர்வை அமைக்குமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.

* மேனாள் பாதுகாப்புச் செயலாளர் டாக்டர் அஜய்குமார் யு.பி.எஸ்.சி. தலைவராக  நியமனம்; ஒன்றிய அரசு உத்தரவு.

தி இந்து

*டில்லி, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பிறப்பு விகிதம் தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு குறைந்து வருகிறது என இந்திய பதிவாளர் ஜெனரல் கடந்த வாரம் வெளியிட்ட மாதிரி பதிவு அமைப்பு (SRS) புள்ளிவிவர அறிக்கை 2021இன் தரவு காட்டுகிறது.

* நான்கு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிப்பதற்கான தேடல் குழுக்களின் கால அவகாசத்தை தமிழ்நாடு அரசு மே 13, 2025 தேதியிட்ட தொடர் அறிவிப்புகள் மூலம் ஆகஸ்ட் 13 வரை நீட்டித்துள்ளது.

* தமிழ்நாட்டில் உள்ள ஆகமக் கோயில்கள் எத்தனை? ஆகமம் பின்பற்றாத கோயில்கள் எத்தனை? மூன்று மாதங்களில் அடையாளம் காண சென்னை உயர்நீதிமன்றம் குழு அமைத்திட உச்ச நீதிமன்றம் உத்தரவு.

* பள்ளிகளில் இருந்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம். தமிழ்நாட்டில் இது இன்றைக்கு 52 சதவீதம். ஒட்டுமொத்த இந்தியாவின் சதவீதத்தை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், வெறும் 29 சதவீதம்தான். தமிழ்நாடு அடைந்துள்ள இந்த வளர்ச்சியை பிற மாநிலங்கள் அடைய வேண்டுமென்றால் இன்னும் 10, 15 ஆண்டுகள் பிடிக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்.

டைம்ஸ் ஆப் இந்தியா

* குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா? 14 கேள்விகள் எழுப்பி உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கோரியுள்ளார் குடியரசுத் தலைவர்.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *