17.6.2025 அன்று சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திருச்செங்கோடு மாநகரில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற உள்ளது.
தமிழர் தலைவர் ஆசிரியர்கி வீரமணி அவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்துவதற்கான மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் பொத்தனூரில் நடைபெற உள்ளது.
இடம்: பெரியார் படிப்பகம், பொத்தனூர்.
நாள்: 16.05.2025 வெள்ளிக்கிழமை காலை 11 மணி
தலைமை: மாவட்டத் தலைவர் ஆ.கு.குமார்
முன்னிலை: பெரியார் சுயமரியாதை பிரச்சார அறக்கட்டளை தலைவர் பொத்தனூர் க.சண்முகம்
நோக்க உரை: தலைமை கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன்
பொருள்: 17.6.2025 தமிழர் தலைவர் ஆசிரியர் திருச்செங்கோட்டில் கலந்துகொள்ளும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சிறப்பான முறையில் நடத்துவது பற்றி.
மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் ஆதரவாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
விழைவு: ஆ.கு.குமார் (மாவட்ட தலைவர்), வை.பெரியசாமி (மாவட்ட செயலாளர், மாவட்ட திராவிடர் கழகம்)