இதற்கு முன் குடி அரசு ஏடு தமது ஒன்பதாம் ஆண்டில் எத்தகைய சவால்களை சந்திக்க இருக்கிறது என்பதை விளக்கும் தலையங்கத்தின் பிற்பகுதியை வெளியிட்டிருந்தோம். அவ்வாறு ‘குடிஅரசு’ கூறியது போலவே அடுத்தடுத்த காலக்கட்டங்களில் ‘குடிஅரசு’ மத போதகர்கள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு இடையில் தநதை பெரியாரின் துணைவியாரும் குடீஅரசு இதழின் பதிப்பாளருமான அன்னை நாகம் மையார் அவர்கள் உடல் நலம் சரியில்லாத ஈரோடு லண்டன் மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அது பலனளிக்காமல் 11.5.1933 அன்று மறைந்தார். அந்த செய்தி கிடைக்கும்போது திருப்பத் தூரில் நடைபெற்ற வடஆர்க்காடு ஜில்லா சுயமரியாதை மாநாட்டில் பங்கேற்று தந்தை பெரியார் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அன்னை நாகமையார் மறைவுக்கு அவர் எழுதிய தலையங்கம் ஒரு ஒப்பற்ற இரங்கல் இலக்கியமாகும். அந்த தலையங்கத்தில் ஒரு இறுதி பகுதியாக,
“எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப்போகும் அத்தியாயங்களோ, சிறிது விசேஷ சம்பவங்களாக இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அந்த அம்மாளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும் துயரமாகவும் காணக்கூடியதாய் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்காது. அத்துடன் அதைக் கண்டு சகியாத முறையில் நானும் சிறிது கலங்கக்கூடும். ஆதலால் நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் குடும்பத்தொல்லை ஒழித்தது என்கின்ற உயர்பதவியையும் அடைய இடமேற்பட்டது” என்று எழுதினார். அவ்வாறு அவர் எழுதியது போலவே அப்படியான அறைகூவல்களை சந்திக்க வேண்டியதாயிற்று..
அன்னை நாகம்மையார் மறைந்த மறுநாளே திருச்சி சென்று அங்கு ஒரு மத மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்து அதற்காக கத்தோலிக்கர்களின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார்.
1935 – 1939 வரையிலான குடிஅரசு ஏட்டில்
அதிகம் எழுதிய பெருமக்கள் விவரம்
கைவல்யம்
எஸ்.என்.எஸ்.சுந்தரம்
திருப்பத்தூர் வே.நாகலிங்கம்
சாக்கோட்டை எஸ்.ஆர்.சாமி
என்.வி.நடராஜன்
மயில்வாகனனார்
ஜி.நாராயணன்
அருப்புக்கோட்டை எம்.எம்.சீனிப்பாண்டியன்
பள்ளத்தூர் சிதம்பரம்
அனுப்பப்பட்டி பி.ஆர்.சின்னகிருஷ்ணசாமி
கொந்தங்குடி ரா.ரத்தினசாமி
டபிள்யூ.எப்.தாமஸ் அபிராமன்
சிறுகுடி செ.ராமலிங்கம்
திருமங்கலம் மணிமாறன்
சித்தார்க்காடு கே.இராமையா
டாக்டர் சி.வா.பாலகிருஷ்ணன்
பி.மீனாட்சி
ஏ.ராதாம்மாள் ஆனந்தன்
ஏ.ஆர்.சிவானந்தம்
விருதை விதுரன்
தி.டி.கோபால்
எஸ்.லட்சுமிரதன்பாரதி
பட்டுக்கேட்டை கே.வி.அழகிரிசாமி
சிதம்பரம் பி.கே.நடேசன்
டி.ஆர்.வரதன்
நாகை காளியப்பன்
பண்டிட் எஸ்.எஸ்.ஆனந்தம்
பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்
டி.என்.ஆர்.சந்திரன் (டி.என்.இராமச்சந்திரன்)
ம. சிங்காரவேலு
ஏ. சோமசுந்தரன்
டி.ஜி.வெங்கடாச்சலம்
பண்டிதர் திருஞானசம்பந்தர்
நாகை முருகேசன்
கொழும்பு சதாசிவம்
முத்துப்பேட்டை எம்.என்.கோவிந்தசாமி
இந்திராணி பாலசுப்ரமணியம்
கே.ஆர்.சுவாமி
சிவகாமி சிதம்பரனார்
டாக்டர் ஆர்.பி.பராஞ்சிபே
கே.எஸ்.டி.முத்துசாமி
பட்டுக்கோட்டை கோ.சண்முகம்
விருதுநகர் தோழர் சி.ச.சுப்பையா
ராஜரத்தினம் பிள்ளை
பட்டுக்கோட்டை தோழர் எம்.ராஜமாணிக்கம்
செய்கோன் தோழர் எம்.ராஜமாணிக்கம்
டாக்டர் அம்பேத்கர்
ஈ.வெ.நாயர் எம்.ஏ.எல்.எல்.பி.
என்.பி.கிருஷ்ணன்
தோழர் வைசு.ஷண்முகம்
எம்.ஏசுதாஸ்
தோழர் ராபின்
ஆர்.பி.நாதன்
தோழர் டி.கே.எம்.சாமி
தி.ராஜன்
உடுமலை கனகராஜன்
பச்சையப்பன்
எம்.என்.நாயர்
அருப்புக்கோட்டை வீர சு.பு.வீரய்யா
சென்னை என்.வி.நடராஜன்
ஈரோடு பி.வேலாயுதன்
டாக்டர் சி.ஆர்.ரெட்டி
சென்னை எஸ்.ரங்கநாதன்
தி.வே.அ.
பட்டுக்கோட்டை எஸ்.சோமசுந்தரம்
துறையூர் எஸ்.தனபாக்கியம்
திவான்பகதூர் ஆர்.சீனிவாசன்
சர்.ஷண்முகம்
தோழர் எஸ்.எம்.ராமையா
குமணன்
சிவானந்த அடிகள்
தோழர் கே.நாராயணம்மா
சிங்கை நேசன்
பள்ளத்தூர் எம்.அருணாசலம்
எம்.சி.ராஜன்
தோழர் அ.பொன்னம்பலம்
தோழர் செல்லத்தாயம்மாள்
சேலம் பாரிஸ்டர் எஸ்.வி.ராமசாமி
நாகை தோழர் பி.அம்மைநாதன்
சிறீவில்லிபுத்தூர் ஞா.பி.ஞானதேசிகம்
குடியேற்றம் மு.அண்ணல் தங்கோ
தோழர் எஸ்.சோமசுந்தர பாரதியார்
ஈரோடு வாணன்
மு.த.வேலாயுதம்
மறைமலையடிகளார்
தோழர் ஆர்.பி.டேவிஸ்
திரு.சொக்கையா
பாரதிதாசன்
எம்.பி.சாமி
இளவலூர் மறைமணி
சடகோபால்
புதுவை எஸ்.சிவபிரகாசம்
கூச்சூர் குழந்தை
பொன்னாகரம் வி.எஸ்.நடேசன்
புதுவை சாமி சித்தானந்த பாரதியார்
சந்தமல்லி அ.சிதம்பரநாத பாவலர்
நஞ்சையா
குஞ்சிதம்
கலிபுல்லா பி.தலைவர்
சி.என்.அண்ணாதுரை
உமா மகேசுவரம் பிள்ளை
போளுர் வி.சுப்பராயன்
எஸ்.ஏ.கே.உபயதுல்லா
அகதி ராயன்
எஸ்.கே.சிசுபாரதி
கே.எம்.பாலசுப்பிரமணியம்
பி.நடராஜன் எம்.ஏ.
சர்.கே.என்.ரெட்டி
சவுந்திரபாண்டியன்
இரண்ணியதாசன்
தோழர் பி.சிதம்பரம்
ராஜம்மாள்
திருவந்திபுரம் கே.கோவிந்தன்
தி.பொ.வேதாசலம்
வித்துவான் ஏ.எம்.குழந்தை
அட்வகேட் சுயம்பிரகாசம்
டி.எஸ்.ஸ்ரீனிவாசன்
பு.துரைராஜ்
ஹேரிகிலமெண்ட்ஸ்
ஆம்பூர் தோழர் கோ.ஜெயராமுது
எம்.என்.முத்துக்குமாரசாமி பாவலர்
பல்லடம் எம்.பொன்னுச்சாமி
தோழர் நானப்ப முதலியார்
சென்னை டி.தேவராஜன்
குகன்
கோவை எம்.ஏ.ரஹ்மான்
அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி
சர்.பன்னீர்செல்வம்
ம.சிங்காரவேலு
கோவை கே.எம்.ஹனீப்
ஜெ.க.வேலன்
எஸ்.க.முஹம்மத் ஹனீப் சாகப்
தோழர் எஸ்.ஜி.ரங்கராமானுஜன்
செ.ராமலிங்கம்
தோழர் காமத்
எஸ்.கே.பி.முத்துராஜா
பி.எம்.அப்துல் மஜீது
சந்தனாபுரம் எபிநேசன்
வைகோன் புரோவேன்ஸியலான்
ஸ்டாலின் ஜெகதீசன்
கோலாலம்பூர் க.ராஜகோபால்
கணேசபுரம் முருகோன்
பம்பாய் என்.சிவபாண்டியன்
சிங்கப்பூர் வி.எம்.முத்து
வி.பிச்சையன்
பூவை. அ.க.நவநீதகிருட்டிணன்
ஆசன் பொறையார்
கோவை கே.எஸ்.முஹம்மன் ஹுசைன்
ஏ.எம்.அஸ்லீம்
எ.எம்.யூசுப் மரைக்காயர்
டி.பி.வேலாயுதசாமி
கோவைக்குடியான்
ஜே.க.வேலன்
க. அய்யலிங்கம்
எஸ்.இக்நட்டோல்
உடுமலை பி.ரங்கநாத நாயுடு
கே.டி.ஆர்.
இது குறித்த 16. 7.1933 தேதியிட்ட குடிஅரசு ஏட்டில் வெளியான செய்தி
‘குடிஅரசு’ இதழ்க் குறிப்புகள்
முகப்பு அட்டை அமைப்பு
(அ) அட்டைப்பட விளக்கம்: துவக்கத்தி லிருந்து 18.12.1927 வரை (மாலை 3: மலர் 34) வெளிவந்த இதழ்களில் காணும் அட்டைப் படத்தின் முகப்பு கீழ்க்கண்டவாறு அமைந்திருந்தது.
பாரதமாதா, ஏர் உழவன், நூல் நூற்கும் பெண், தச்சுத் தொழிலாளி,
மூட்டை சுமப்பவர், நெசவாளி, தேர் இழுத்து வரும் கூட்டம், தேர்ச் சக்கரத்தில் சிலர் நீண்ட கிட்டிபோட்டு தள்ளுதல், கிருஸ்துவக் கோயில், இந்துக் கோயில், முஸ்லீம் பிறை, ஓமகுண்டம் எரிதல், புத்தர், நீர்நிலை அருகில் ஆடுமாடுகள் நிற்றல், கரும்பு சோளம், கம்பு, நெல், கோதுமை முதலிய பயிர்கள் கதிர்களுடன் காணப்படுதல்.
18.12.1927 இதழுக்குப் பிறகு அட்டையில் படங்கள் இடம்பெறவில்லை.
ஆ) ‘மகாத்மா காந்தி வாழ்க’ என்ற சொற்றொடர், அட்டைப் படத்தின் உச்சியின் மையப்பகுதியில் 18.4.1926 முதல் (மாலை 1: மலர் 47) 13.11.1927 இதழ் (மாலை 3: மலர் 29) வரை காணப்படுகின்றன.
இ) ‘கதர் வாழ்க’ என்ற சொற்றொடர், அட்டைப் படத்தின் உச்சியின் மையப்பகுதியில், 20.11.1927 (மாலை 3: மலர் 30) முதல் 18.12.1927 வரை (மாலை 3: மலர் 34) காணப் படுகின்றன.
ஈ) தமிழ் ஆண்டுக் கணக்கு, இதழின் துவக்க காலம் முதல் 08.04.1944 (மாலை 17: மலர் 26) வரை அட்டையில் குறிக்கப்பட்டுள்ளது.
உ) இதழின் பக்கங்களுக்கு தமிழ் எண்கள் துவக்கம் முதல் 02.06.1929 வரை (மாலை 5: மலர் 5) இடப்பட்டு வந்தன. அதற்குப் பின்னர் பக்கங்களுக்கு தமிழ் எண்கள் குறிப்பது கைவிடப்பட்டது.
ஊ) நாயக்கர் பட்டம்: இதழின் ஆரம்பம் முதல் 18.12.1927 வரை (மாலை 3: மலர் 34) அட்டையில், ஆசிரியர் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பின் ‘நாயக்கர்’ என்ற ஜாதிப் பட்டம் விடப்பட்டுள்ளது.
எ) திருக்குறள்: இதழின் அட்டையில்,
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்,’ (972) என்ற குறளும்,
‘எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு’ (355) என்ற குறளும்,
‘எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு’ (423) என்ற குறளும்,
13.01.1935 இதழ் முதல் (மாலை 9: மலர் 23) 29.12.1940 வரை (மாலை 16: மலர் 20) காணப்படுகின்றன.
அத்துடன் 27.12.1947 முதல் 03.04.1948 வரை அவ்வப்போது தலையங்கத்திற்கு மேல்
‘மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்’ (278) (24.01.1948),
‘அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்’ (611) (14.02.1948),
‘உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று’ (890) (21.02.1948),
‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு’ (735) (28.02.1948),
‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு’ (766) (03.04.1948)
ஆகிய திருக்குறள்கள் காணப்படுகின்றன.
ஏ. பாரதியார்பாடல்: துவக்கத்தில் (02.05.1925) “எல்லாரும் ஓர் இனம் எல்லாரும் ஓர் குலம்”, “சாதிகள் இல்லையடி பாப்பா” ஆகிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதன்பின் பல இதழ்களில் “எல்லோருமோர்குலம் எல்லோருமோர் இனம்”, என்ற பாடல் மட்டும் இடம் பெற்றுள்ளது. பாரதியார் பாடல் 25.10.1925 வரை காணப்படுகிறது.
திருச்சியில் மே மாதம் 14ஆம் தேதி நடந்த ஒரு சுயமரியாதைத் திருமணத்தை முன்னிட்டு தோழர் ஈ. வெ. ராமசாமியும், மணமகனும் மணமகளும் இருவருடைய தந்தைமாரும் ஆகிய அய்வர்களை இரண்டு போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள், இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள், பல போலீஸ் ஏட்டுகள், கான்ஸ்டேபிள்கள் ஆகியவர்கள் திருமணம் நடந்த இடத்துக்கு, துப்பாக்கி சகிதம் வந்து அரஸ்ட் செய்து, பாலக்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றதும், அங்குப் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 5-30 மணி முதல் 10-30 மணிவரையில் வைத்திருந்து ஸ்டேட்மெண்டுகளும் முச்சலிக்காக்களும் எழுதி வாங்கிக்கொண்டு விடுதலை செய்ததும் யாவரும் அறிந்ததேயாகும்.
மற்றும் திருமண ஒப்பந்தம் நடந்த இடத்தின் முன்வாசலில் தோழர் ஈ. வெ. ராமசாமியைப் போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள் பல கேள்விகள் கேட்டபோது தோழர் ராமசாமி இன்ஸ்பெக்டரைப் பார்த்து, “நீங்கள் என்ன முறையில் எந்த ஆதாரத்தின் மீது இந்தக் கேள்விகள் கேட்கின்றீர்கள்?” என்று கேட்டதற்கு “மிஸ்டர் ராமசாமி நாயக்கரே! உங்களை அரஸ்ட் செய்து இருக்கிறோம். நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவேண்டும்” என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தக் கூட்டத்தில் சுமார் 200, 300 பேர்கள் அறிய கர்ச்சனையோடு சொன்னார். அதற்குத் தோழர் ராமசாமி என்ன ஆதாரம் என்று கேட்க, “நீங்கள் செய்துவைத்த கல்யாணம் சட்ட விரோதமானது. செஷன்சுக்குக் கமிட்டி செய்யக்கூடிய கேசு, 10 வருஷ தண்டனைக்கு உட்பட்டது, வாரண்டில்லாமல் அரஸ்ட் செய்யக்கூடியது, ஆதலால் ஆதாரம் தேவை இல்லை” என்றும் சொன்னார்.
இப்படியிருக்க, இன்றைய தினம் அதே போலீசார் தோழர்களான ஈ. வெ. ராமசாமியையும், மணமக்களையும், பெற்றோர்களையும் போலீசார் அரஸ்ட் செய்யவில்லை என்றும், ஸ்டேட்மெண்டோ, முச்சலிக்காவோ வாங்கவில்லை என்றும், கலகம் நடக்குமோ என்கின்ற சந்தேகத்தின்மீது (கல்யாணத்தை நடத்திக்கொடுப்பதற்காக) கல்யாண வீட்டுக்குப் போனதாகவும் சொல்லுகின்றார்கள், என்றால் இதற்கு எதை ஒப்பிடுவது என்பதும் நமக்கு விளங்கவில்லை.
திருச்சி போலீசாரும், கத்தோலிக்க பாதிரிகளும் தோழர் ராமசாமி மீது கிறிஸ்தவ கல்யாணச் சட்டப்படி கேசு செய்வதற்கு அவர்கள் பட்டபாட்டை திருச்சி பொதுஜனங்கள் கண்டு சிரிப்பாய் சிரித்து விட்டார்கள்.
திருச்சி கத்தோலிக்க பாதிரிகள் சென்னையில் பல பாதிரி குருக்களையும் பல பாரிஸ்டர்களையும் மேதாவி வக்கீல்களையும் போய் அபிப்பிராயம் கேட்டும் பார்த்து விட்டார்கள். திருச்சி பப்ளிக் பிராசிக்கூட்டரையும் சில அதிகாரிகளையும் கெஞ்சியும் பார்த்து விட்டார்கள். எங்கு போய் அழுதும் ஒரு பயனும் ஏற்படாததால் உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி போல் வாயை மூடிக்கொண்டார்கள்.
இந்த லட்சணத்தில் இந்தப் பித்தலாட்ட தடபுடலுக்குப் பிறகு திருச்சியிலும் சுற்றுப் பக்கங்களிலும் இதுபோன்ற பல திருமணங்கள் நடந்தும் ஆய்விட்டது. கிறிஸ்தவர்களுக்குள்ளாகவே ஒரு மனைவி இருக்க மற்றொரு மனைவியை மணக்கும் திருமணமும் சிலது நடந்தாய்விட்டது.
இவற்றின் பயனாய் திருச்சி ஜில்லாவில் இப்போது அனேகர் தங்களை கிறிஸ்தவர் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படும்படியான நிலைமை வந்துவிட்டது. பாதிரிமார்களுக்கும் தனியாய் வழியில் நடக்க பயம் ஏற்பட்டு விட்டது. அவ்வளவு தூரம் போவானேன். உலக கிறிஸ்தவ சமுகத்துக்கே தலைமையான ரோம் நகரில் உள்ள சர்ச்சுக்கே வெடிகுண்டு போட்டு சேதம் விளைவித்து விட்டார்கள் என்பதோடு போப்பரசர் என்று சொல்லப்படுபவரும் “கடவுளுக்கு”ச் சமானமாய் கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் மதிக்கப்படுபவருமான ரோம் பிரதம குருவுக்கே, கட்டடத்தை விட்டு வெளியில் வரவேண்டுமானால் போலீசு-ஒற்றர்கள் (சி.அய்.டி) பந்தோபஸ்து இல்லாமல் வரமுடியவில்லை என்று கத்தோலிக்கப் பத்திரிகைகள் கூக்குரல் இடுகின்றன.
நிலைமை இப்படி இருக்க இதற்கெல்லாம் காரணம் தங்கள் மதத்தின் போலித்தனமும், பாதிரிகளின் பித்தலாட்டமும், சூழ்ச்சிகளுமே காரணம் என்று எண்ணாமல், குடிஅரசின் மீதும் சுயமரியாதை இயக்கத்தின் மீதும் பழி கூறுவதும், குடிஅரசை ஒழிப்பதற்காகக் கமிட்டி போட்டு பணம் வசூலிப்பதும், குடிகாரன், வெறிகாரன் போல் கண்டபடி இழி வார்த்தைகளால் வைவதும், சில குடிகாரர்களை ஏவிவிட்டு கலகம் செய்யச் செய்வதுமான காரியங்களால், தங்கள் மத வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று பாதிரிகள் நினைத்தால் இந்த 20வது நூற்றாண்டில் செல்லுமா என்றுதான் கேட்கின்றோம்.
குடிஅரசு பத்திரிகை செத்துப் போகலாம். சுயமரியாதை இயக்கமும் மறைந்து போகலாம் என்றாலும் அவைகளுக்குப் பதில் உடனே அவற்றைவிட வேகமானதான பத்திரிகையும் இயக்கமும் அவைகள் புதைபட்ட இடத்திலிருந்தே தோன்றிவிடும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், கத்தோலிக்கக் கிறிஸ்துவ மத இயக்கம் மாத்திரம் வெகுசீக்கிரத்தில் அழுவாரற்ற பிணமாகச் சாகப் போகின்றது என்பதற்குப் பந்தயம் கட்டத் தயாராய் இருக்கிறோம்.
இன்றைய தினம் திருச்சி, தஞ்சை இரண்டு ஜில்லாக்களிலும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை “இந்துமதக்”காரர்கள் சேர்த்துக்கொள்வதாய் இருந்தால் 100க்கு 75 பேர் ‘இந்து’க்களாக தயாராய் இருக்கிறார்கள். கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு உள்ள சர்க்கார் சலுகை “இந்து”க்களுக்கு இருந்து அதன்மூலம் மதம் மாறுகின்றவர்களுக்கு ஏதாவது பிழைப்புக்கு வழி செய்வதாய் இருந்தால், பாக்கி 24 பர்செண்டும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு “மனந்திரும்ப”த் தயாராய் இருக்கிறார்கள்.
நம்மைப் பொருத்தவரை கிறிஸ்தவரானாலும், இஸ்லாமியாரானாலும், இந்துவானாலும் மற்றும் யாரானாலும், மதத்தையே அடியோடு விட்டு விடுவதானால் விட்டுவிடட்டும். அப்படிக்கில்லாமல் ஒரு மதத்தைவிட்டு மற்றொரு மதத்துக்குப் போவது என்பது என்பது (வாழ்க்கை சவுகரியத்தைத் தவிர) யாதொரு காரியத்துக்கும் பயன்படாது என்றும், புத்திசாலித்தனமாகாது என்றும்தான் கருதுகிறோம். உலகில் உள்ள மதங்களில் சில மதங்களுக்கு நல்ல கொள்கைகள் உண்டு, புத்தி இல்லை. சில மதங்களுக்குப் புத்தியுண்டு, கொள்கையில்லை. சில மதங்களுக்குப் புத்தியுமில்லை, கொள்கையுமில்லை என்கின்ற முறையில் உலகில் உள்ள மதங்களை எல்லாம் பிரித்துப் பார்ப்போமேயானால் இந்த கத்தோலிக்க கிறிஸ்தவ மதமானது, கொள்கையும் இல்லை, புத்தியும் இல்லை என்கின்ற கூட்டத்தில்தான் சேர்க்கக்கூடியதாயிருக்கிறது. இந்தக்காரணத்தால் தான் இப்படிப்பட்ட மதங்கள் இந்தக் காலத்தில் வாழமுடியாது என்று சொல்ல வருகின்றோம்.
இந்த மதங்களுக்கு தாய் வீடுகளாய் இருக்கும் மேல் நாடுகளில், உதாரணமாக ஸ்பெயின் ஜெர்மனி, ருஷியா, முதலிய தேசங்களில் கோயில்கள் இடிபடுவதும், கோவில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதும், பாதிரிமார்கள் போலீஸ் பந்தோபஸ்தில் வாழ்வதும், மத ஆதாரங்களை தூள் தூளாக்கி எரிப்பதுபோல் எதிர் பிரசார புஸ்தகங்கள், துண்டு விளம்பரங்கள் ஆகியவைகள் புதிப்பித்து வெளியிடுவதுமான காரியங்கள், இன்று அளவிட முடியாதபடி நடந்து வருவதை, எவ்வளவு அசத்திய சாமர்த்திய பாதிரியும் மறுக்க முடியாதபடி விளங்குகின்றன. இதற்காக குடிஅரசையும் சுயமரியாதையையும் வைவதால் பயனென்ன? கிறிஸ்துவ மார்க்கம் ஒழிவதற்கும் பழிக்கப்படுவதற்கும் காரணம், மனிதர்களுக்கு அறிவு வளர்ச்சியும், சுயமரியாதை உணர்ச்சியும், பெருகிவருவதுதான் தான் காரணமே ஒழிய வேறல்ல.
ஆகையால் கிறிஸ்தவ மதம் மாத்திரமல்லாமல், உலகில் இனி எந்த மதம் வாழவேண்டுமானாலும் மக்களை மூடர்களாக வைத்திருக்க முயற்சித்து வெற்றிபெற்றால் மாத்திரம் ஒரு சமயம் முடியுமே ஒழிய, மற்றபடி குடிஅரசையும், சுயமரியாதை இயக்கத் தையும், இராமசாமியையும், வைது பழித்துத் தூற்றுவதன் மூலம், தங்கள் மதத்தைக் காப்பாற்றிவிடலாம் என்று நினைப்பது, இனி பலிக்காது என்பதை உணரவேண்டுமாய்த் தெரி வித்துக் கொள்ளுகிறோம்.
‘குடிஅரசு’ – கட்டுரை – 16.07.1933
(தொடரும்)