சென்னை, மே. 14- பெருங் கொடுமைக்கு நீதி கிடைத்து இருக்கிறது. அ.தி.மு.க. குற்றவாளி கூடாரத்தை காப்பாற்ற முயன்ற ‘சார்’கள் வெட்கி தலைகுனிய வேண்டும் என்று பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
தீர்ப்புக்கு வரவேற்பு
அ.தி.மு.க. ஆட்சியில்கடந்த 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண் களை பாலியல் வன்கொடுமை செய்து காட்சிப்பதிவு எடுத்து மிரட்டிய வழக்கில் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து, கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பை தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டா லின் வரவேற்று உள்ளார்.
அ.தி.மு.க. நிர்வாகி
இதுதொடர்பாக அவர், குற்றவாளிகள் புகைப்படத்துடன் தொலைக்காட்சியில் வந்த செய்தியை இணைத்து, சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்து இருக்கிறது. அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தை பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கி தலை குனியட்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.