ஊக்க மருந்து சோதனை மய்யத்தில் உதவியாளர் பணி

1 Min Read

புதுடில்லியில் செயல்பட்டு வரும் தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Technical Assistant

காலியிடங்கள்: 9

ஊதியம்: மாதம் ரூ. 35,400 – 1,12,400

தகுதி : வேதியியல், உயிரியல், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், மருந்து அறிவியல் போன்ற பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். Drug Testing Lab-இல் குறைந்தது ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 26.5.2025 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், எஸ்சி, எஸ்சி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் மனத் திறன், பொது அறிவு, ஆங்கில மொழிப் புலமை மற்றும் விண்ணப்பதாரரின் முக்கிய பாடப் பிரிவில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் இதர தேர்வுகளுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விபரங்கள் தேர்வு நுழைவுச் சீட்டில் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஒபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு ரூ.1,000. இதர பிரிவினர்களுக்கு ரூ.500 மட்டும். கட்டணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ndtlindia.com இணையதளம் வழியாக இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.5.2025

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *