மதுரையில் மேனாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் 85ஆவது பிறந்தநாள் விழா

viduthalai
3 Min Read

மதுரை, மே 14- 27.4.2025 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு மதுரை பெரியார் மய்யத்தில் உள்ள பெரியார் வீரமணி அரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழிகாட்டுதலின் படி மேனாள் அமைச்சரும் எந்நாளும் சுயமரியாதை வீரருமான பொன் முத்து ராமலிங்கம் 85ஆவது பிறந்தநாள் விழா-வாழ்த்தரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

தொடக்க நிகழ்வாக ‘மூடத் தனம் எனும் பீடை, அன்றும் இன் றும்’ எனும் தலைப்பில் மதுரை அ.வேங்கைமாறன்  சுமார் 45 நிமிடங்கள் நம் மக்களிடம் மண்டிக்கிடக்கும் மூடப்பழக்க வழக்கங்களையும் அதனால் ஏற்படக்கூடிய இழப்பீடுகளையும் இதனால் யார் பலன் அடைகிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார். அதற்குப்பின் பிறந்தநாள் விழா தொடங்கியது மாவட்ட கழகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் கேக்கை வெட்டி ,பொன். முத்துராமலிங்கம் அவருடைய வாழ்விணையர் மல்லிகா அனைவருக்கும்  இனிப்புகளை வழங்கி அன்பைப் பரிமாறிக் கொண்டார்கள். வருகை தந்த அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் கேக், காரம், தேநீர்  வழங்கப்பட்டது. அடுத்த நிகழ்ச்சியாக வாழ்த்தரங்கம் தொடங்கியது.

வாழ்த்தரங்கிற்கு மாவட்ட கழகத்தலைவர்  அ. முருகானந்தம் தலைமையேற்றார்.  நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததோடு அனைவ ரையும் வரவேற்றுத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம் உரையாற்றினார். நிகழ்வுக்குத்  தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராஜா, மாவட்டச் செயலாளர் இரா.லீ.சுரேஷ், மாவட்டக்காப்பாளர் சே. முனியசாமி, வழக்குரைஞரணித் துணைச்செயலாளர் வழக்கு ரைஞர் நா.கணேசன், பகுத் தறிவாளர் கழக மாநில அமைப் பாளர் சி.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் நிகழ்வாகப் பாவலர் சுப முருகானந்தம் விழா நாயகரைப் பற்றிய கவிதை வரிகளைப் பாடி பாமாலையால் புகழாரம் சூட்டினார். முன்னிலை ஏற்றுப் பேசிய வழக்குரைஞரணிச் செயலாளர் மு.சித்தார்த்தன் அய்யா பொன்முத்துராமலிங்கம் அவர்களின் சட்ட நுணுக்கம் பற்றிய அனுபவத்தைப் பெற் றதை எடுத்துரைத்தார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மறுமலர்ச்சி தொழிலாளர் அணி இணை பொதுச் செயலாளர் மகபூப் ஜான், வல்லரசு பார்வர்டு பிளாக் தலைவர் வி.என்.அம்மாசி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேரு, மதுரை மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர் தா.ஜெயராஜ், பொன் முத்துராமலிங்கம் அவர்களின் மகள் பேராசிரியர்  பொன்.முத்து, தேன்மொழி  ஆகியோர்  உரையாற்றினார்.

காங்கிரசு கட்சியைச்சார்ந்த மு.சிதம்பரபாரதி, மதுரை முன்னாள் மேயர் பெ குழந்தை வேலு, திமுக உயர் மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் வேலுச்சாமி, தி.மு.க. மேனாள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் துரை.எழில்விழியன் ஆகியோர் உரையாற்றினார்.

அடுத்து கழக பொருளாளர் வீ.குமரேசன், தலைமைக் கழகத்தின் சார்பாக பொன்.முத்துராமலிங்கம் பற்றியும் அவரது பணிகள் பற்றியும் உரையாற்றினார்.

நிறைவாக விழா நாயகர் பொன்.முத்துராமலிங்கம் அவர்கள் தந்தை பெரியார் இருந்து,திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இருந்து எனக்கு ஒரு பாராட்டு விழா நடந் தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவேனோ, அந்த மாதிரி மகிழ்ச்சியை அடைகிறேன் என்று குறிப்பிட்டு  ஏற்புரை வழங்கினார்.

நிகழ்வின் இறுதியில் திராவிட மாணவர் கழக அமைப்பாளர் சீ.தேவராஜபாண்டியன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் விஜயா குரு, திமுக வட்டச் செயலாளர்  கி.காமராஜ், ஜெ.ரகுவரன், ஆதவன்ராஜா, கா.சிவகுருநாதன் புறநகர் மாவட்ட கழக தலைவர் த.ம.எரிமலை, புறநகர் மாவட்ட செயலாளர் பா.முத்துக்கருப்பன், மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் பாக்யலட்சுமி, புறநகர் மாவட்ட பக.தலைவர்.வீரராகவன்தங்கத்துரை,மாவட்ட பக.தலைவர் ச.பால்ராஜ், செயலாளர் வீர.பழனிவேல் ராஜன், மாவட்ட துணை தலைவர் பொ.பவுன்ராஜ், நா. முருகேசன் மாவட்ட துணை செயலாளர் தனுஷ்கோடி, க.சிவா மாவட்ட இளைஞரணி செயலாளர் பா.காசி, மகளிரணி, ராக்கு,நாகராணி, அல்லி ராணி,  அழகுப் பாண்டி,சுசிலா வேல்முருகன்,தனம் முருகானந் தம், பெரியார் பிஞ்சு அ.நன் னன், பெத்தானியாபுரம் பாண்டி ச.வேல்துரை, பேக்கரி கண்ணன், சண்முகசுந்தரம், குலசேகரன், ஏஏ.முத்து, எல்அய்சி.செல்லக்கிருட்டிணன், மு.மாரிமுத்து,மணிராஜ்,பெரி.காளியப்பன், புதூர் பாக்கியம், ஜெஎஸ்.மோதிலால், மசுமோதிலால், போட்டோ ராதா, காண்ராக்டர் சண்முகம், செல்லத்துரை, ரமேஷ், கோரா, முரளி, மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளர்கள், தோழர்கள் ஏராளமாக அரங்கம் நிறைந்து  கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *