அறந்தாங்கி, மே 13- அண்ணல் அம்பேத்கர் 134ஆவது பிறந்தநாளினையொட்டி டாக்டர் அம்பேத்கர் சமூக நல அறக்கட்டளை, ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்து வமனை மற்றும் பெரியார் மருத்துவக் குழுமம் இணைந்து புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம், பல் மற்றும் கண் பரிசோதனை, சர்க்கரை நோய் மற்றும் பொது மருத்துவ முகாம் 10.05.2025 அன்று சனிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை அறந்தாங்கி பேராவூரணி சாலையிலுள்ள தாலிப் மஹா லில் நடைபெற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூரி
அறந்தாங்கி அரசு ஊழியர் அய்க்கிய பேரவைத் தலைவர் ம.குமார் தலைமையில் நடை பெற்ற இம்மருத்துவ முகாமினை டாக்டர் அம்பேத்கர் சமூக நல அறக்கட்டளைத் தலை வர் மு.கண்ணதாசன் வரவேற் புரையாற்றி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை மற்றும் மரு.மானுசிறீ ஆகியோர் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்துகளை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்தனர்.
ஹர்ஷமித்ரா மருத்துவமனை
ஹர்ஷமித்ரா மருத்துவ மனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் மானு சிறீ மற்றும் மருத்துவக் குழுவினர் தலைமையில் நடைபெற்ற மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையில் 40 பேரும் பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் முனவர் சுல்தானா மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் சவுமியா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சர்க்கரை நோய், பல் மற்றும் பொது மருத்துவ முகாமில் 103 பேரும் திருச்சி கண் மருத்து வமனையின் பார்வை மருத்துவர் (Optometrist) பிரியதர்சினி தலைமையில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில் 61 பேரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இலவச பரிசோதனைகள்
இம்மருத்துவ முகாமில் பெரியார் மருந்தியல் கல்லூ ரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. அ. ஜெசிமா பேகம், பேரா. இராஜேஷ் மற்றும் மாணவர்கள் பொது மக்களுக்கு மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினர். திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவ மனையின் செவிலியர் ஹெலன் மற்றும் செவிலிய உதவியாளர் பயிற்சி மாணவி மோனிகா ஆகியோர் பொது மக்களுக்கு இரத்த அழுத்தம், இரத்தச் சர்க்கரை போன்ற மருத்துவ பரிசோதனைகளை மேற்காண்டனர்
போதையில்லா பாதை…
இந்நிகழ்ச்சியில் ஹர்ஷமித்ரா மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் கோவிந்தராஜ் ‘போதையில்லா பாதை’ என்ற தலைப்பில் சிறப்பு ரையாற்றினார்.
மேலும் தொழில் முனைவோருக்கான வழி காட்டுதல் நிகழ்ச்சி மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் டாக்டர் அம்பேத்கர் சமூக நல அறக் கட்டளையின் தலைவர் மு.கண்ணதாசன் சிறப்பாக செய்திருந்தார். அரசு பள்ளி ஆசிரியரான இவர் திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் க.மாரிமுத்து, நகரத் தலைவர் ஆ.வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் வே.அமுதா, ஆவுடையார் கோவில் ஒன்றியத் தலைவர் மு.கார்த்திக் மற்றும் மகளிரணியைச் சார்ந்த கா.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இம்மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற அம்பேத்கர் சமூக நல அறக்கட்டளையின் பொறுப் பாளர்கள் மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் சிவ.அருணாசலம் ஆகியோர் உறுதுணையாக திகழ்ந்தனர். பெரியார் பிஞ்சு பகுத்தறிவு அவர்கள் பெயரில் அமைந்த புத்தக கடை இந்நிகழ்வில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.