மக்களுக்கு உயர் மருத்துவ சேவைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வினை உறுதி செய்யும் வகையில், சட்டமன்ற மானியக் கோரிக்கை 2025-26ஆம் ஆண்டு அறிவிப்பின்கீழ், 1256 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 10.05.2025 அன்று சைதாப்பேட்டை, மாந்தோப்பு, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னோட்டமாக நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.