கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
1 Min Read

13.5.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*வெளி விவகாரத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி குறித்து அவதூறு செய்திகளை பரப்பும் சங்கிகள்; வெளிநாட்டு தூதர்கள், எதிர்க்கட்சிகள், கண்டனம்.

* வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக மிரட்டி இந்தியா-பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு பேட்டி

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டுக. பிரதமர் பங்கேற்க வேண்டும், சிபிஅய்.எம், பிரதமருக்கு கடிதம்.

தி இந்து:

* ஆபரேஷன் சிந்தூர் குறித்த பிரதமர் மோடியின் உரையில் டிரம்ப் பஞ்சாயத்து குறித்து மவுனம் காத்ததாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.

* நாமத்துக்கு சண்டையா? காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் போது வடகலை, தென்கலை பிரிவுகள் மீண்டும் மோதல்.

* தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்க அரசுகளால் மும்மொழி சூத்திரம் உட்பட தேசிய கல்விக் கொள்கையை (NEP) அமல்படுத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு கேரள உயர்கல்வி அமைச்சர் ஆர். பிந்து பாராட்டு.

தி டெலிகிராப்:

*அமெரிக்க அதிபர் டிரம்ப் யார் நமக்கு பஞ்சாயத்து செய்வதற்கு? எதிர்க்கட்சிகள் கேள்வி.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *