மோதல் முடிவுக்கு வந்ததால் காஷ்மீர் மீண்டும் அமைதி பூங்காவானது

viduthalai
1 Min Read

சிறீநகர், மே 13 இந்தியா- பாகிஸ்தான் இடையே நடந்து வந்த மோதல் முடிவுக்கு வந்ததால் காஷ்மீரில் நேற்று முன்தினம் (11.5.2025) இரவு பொழுது அமைதியாக இருந்தது. மக்கள் நிம்மதியாக உறங்கினர்.

இந்தியா-பாகிஸ்தான் போர்

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா அதிரடி தாக்குதலை தொடங்கியது.

இதையடுத்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்ததால் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து 4 நாட்க ளுக்கு வான்வெளிப் போர் நடந்தது. இந்தியாவின் அதிரடியை தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் பின்வாங்கி, சமரசத்துக்கு வந்தது. இதனால் இருநாடுகளுக்கு இடையே நடந்து வந்த சண்டை கடந்த 10-ஆம் தேதி மாலையுடன் நிறுத்தப்பட்டது. அன்று இரவும் காஷ்மீரில் சில இடங்களில் பாகிஸ்தான் ஏவுகணைகளை ஏவியது. அதன் பிறகு நிறுத்தப்பட்டது.

நிம்மதியாக உறக்கம்

நேற்று முன்தினம் முதல் எந்தவித மோதலும் இல்லை. இரவு காஷ்மீரில் வெடிகுண் டுச் சத்தம் எதுவும் இல்லை. இதனால் காஷ்மீர் மாநிலம் முழுவதும் இரவு அமைதியாக இருந்தது. கடந்த ஒருவார பதற்றத்தை மறந்து மக்கள் நிம்மதியாக உறங்கினர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *