ஜெயங்கொண்டம், மே13- ஜெயங்கொண்டம் மேனாள் நகரத் கழக தலைவர் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் வை.செல்வராஜ் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 11.5.2025 ஞாயிறு பகல் 11.30மணியளவில் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட கழகத் தலைவர் விடுதலை. நீலமேகன் தலைமையேற்க, தலைமை செயற்குழு உறுப்பினர் க. சிந்தனைச் செல்வன்ஒருங்கிணைத்து நடத்தினார். மாவட்ட காப்பாளர்கள் சி. காமராஜ், சு.மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் இரத்தின. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மறைந்த செல்வராஜ் அவர்களின் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் இரங் கலுரையாற்றினார். மேலும் மாவட்ட தொழிலாளரணி செயலாளர்\மா கருணாநிதி, மாவட்ட வழக்குரைஞரணி அமைப் பாளர் மு.ராஜா,புங்கனேரி செல்வமணி, ஜெயங்கொண்டம் தமிழ்மணி, வடலூர் இந்திரஜித், செந்துறை தா.மதியழகன், உள்ளிட்ட பொறுப்பாளர்கள் அவரின் தொண்டை நினைவுகூர்ந்து இரங்கலு ரையாற்றினர். மறைந்த செல்வராஜுவின் மகன் செ.கவாஸ்கர் நன்றி கூறினார்.
மாவட்டத் துணைத் தலைவர் இரா.திலீபன், ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் அ.சேக்கிழார், நகரத் தலைவர் துரை. பிரபாகரன், நகர செயலாளர் கே.எம்.சேகர், சு.கலைவாணன ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக. முருகன், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், மாவட்டத் துணைச் செயலாளர் பொன். செந்தில்குமார், தா.பமூர் ஒன்றிய தலைவர் சிந்தாமணி ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் பி .வெங்கடாசலம், ஒன்றிய அமைப்பாளர்சி.தமிழ் சேகரன், ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி தலைவர் மா.சங்கர், செந்துறை ஒன்றிய தலைவர் மு. முத்தமிழ் செல்வன், வடலூர் குண சேகரன், கோடங்குடி ரவி உள்ளிட்ட கழக பொறுப் பாளர்களும் தோழர்களும் உறவினர்களும் பங்கேற்ற னர்.