நலம் தரும் மருத்துவ துளிகள்!

viduthalai
1 Min Read

ஆஸ்துமா நோய் உள்ளோர், மூச்சுவிட சிரமப்படுவர். அந்த சமயங்களில், ஒரு தாம்பாளத்தில் வெந்நீரை ஊற்றி, அதில் பாதங்களை அழுத்தி வைக்க, வெந்நீரின் சூடு உள்ளங்கால் மூலமாக மெல்ல உடலில் பரவி, மூச்சு விடுவதை சீராக்கும்.
பெண்கள் அதிக அளவில் உட்கொள்ள வேண்டிய பழங்களில் முக்கியமானது, திராட்சை. மாதவிடாய் காலங்களில் ரத்த போக்கு அதிகமாக இருக்கும் பெண்கள், திராட்சை பழத்தை உண்பதால், ரத்த சோகை வராமல் தவிர்க்கலாம்.
உடலில் எந்த உறுப்பில் சுளுக்கு ஏற்பட்டாலும், வெந்நீர் ஒத்தடம் கொடுத்து, தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெயை காய வைத்து, அதில் சிறிது மிளகு துாள், கற்பூரம் போட்டு கலக்கி பூசலாம்; சுளுக்கு, ‘மளுக்’கென்று விட்டு விடும்.
ஜலதோஷம் மற்றும் தலையில் கோர்த்துள்ள நீர் போக, சாம்பிராணி புகை போட்டு தலையை காய வைத்துக் கொள்வது போல், ஓமம், மஞ்சள் சிறிதளவு போட்டு புகையை மூக்கு, தொண்டையில் இழுத்துக் கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.
அஜீரணம், அடிக்கடி தொண்டை வறட்சி மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருந்தால், கேரட் மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றை பச்சையாக அன்றாடம் வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டால், உடனே பலன் தெரியும்.
சொறி, சிரங்கு உள்ளோர், கடல் நீரில் தொடர்ந்து சில நாட்கள் கழுவி வந்தால், அவை இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *