திராவிடர் கழக தலைமைக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை 2025 ஜூலை 10,11,12,13 (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய நான்கு நாள்கள் குற்றாலம் ‘வீகேயென்’ மாளிகையில்
46-ஆம் ஆண்டாக மிக சிறப்புடன் நடை பெறவுள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மற்றும் பெரியார் பேருரையாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று வகுப்பு எடுக்க உள்ளார்கள்.
15 வயது முதல் 35 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். முதலில் முன்பதிவு செய்யும் 100 நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விரிவான நிகழ்ச்சி நிரல் விரைவில் விடுதலையில் வெளியிடப்படும்.
முன்பதிவுக்கு
[email protected]
[email protected]
– இரா.ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்
திராவிடர் கழகம், செல்பேசி: 9842598743