வணக்கம், ‘Periyar Vision OTT’-ல் ‘காந்திமதி மணியம்மையார் ஆனது எப்படி?’ என்கிற காணொலியை பார்க்க நேர்ந்தது. வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் பேசிய இந்தக் காணொலி, மணியம்மையாரைப் பற்றிய முழுமையான அறிமுகத்தைத் தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது. மணியம்மையாரின் சுயசரிதையிலிருந்து அவரது வாழ்க்கைக் குறிப்புகளை தெளிவாக விளக்கியுள்ளார். பெண்கள் பொதுவாழ்வுக்கு வருவதற்கான தேவையை உணர்த்தும் வகையில் இந்தக் காணொலி அமைந்துள்ளது. நன்றி.
– கோ. கருணாகரன், திருச்சி
Periyar Vision OTT-இல் காணொளிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
இணைப்பு : periyarvision.com