அங்கம்மாள் மறைவு
கழகத் தலைவர் இரங்கல்
கவிப்பேரரசர் கவிஞர் வைரமுத்து அவர்களின் அன்னையார் திருமதி அங்கம்மாள் (வயது 92) அவர்கள் அவரது சொந்த கிராமத்தில் நேற்று (10.5.2025) மாலை காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு நாம் துயரமுற்றோம்.
எவ்வளவு வயதானாலும் தாயின் அன்பும், அரவணைப்பும், பாசமும் என்றும் துய்த்துக் கொண்டே இருப்பது, கடமை உணர்ந்த பிள்ளைகளுக்கு முக்கியத் தேவை.
அவரது இழப்பு, அக்குடும்பத்திற்கும், குறிப்பாக கவிஞர் அவர்களுக்கு மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தும். இது சொற்களால் வர்ணிக்க, ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்! என்றாலும் இயற்கையை எண்ணி ஆறுதல் கொள்ள வேண்டும்.
அம்மையாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், கவிஞர் வைரமுத்து, அவர்தம் குடும்பத்தினருக்கு நமது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.5.2025
குறிப்பு: நேற்று 10.5.2025 இரவு 10 மணிக்கு கவிஞர் வைரமுத்து அவர்களை தொலைபேசியில் அழைத்து அவரிடம் ஆறுதலைத் தெரிவித்தார் கழகத் தலைவர் ஆசிரியர்.