பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட் வரும் 18ஆம் தேதி விண்ணில் பாய்கிறது

2 Min Read

சென்னை, மே 11- பூமி கண்காணிப்புக்கான இ.ஓ.எஸ்-09 செயற்கைக் கோளை சுமந்தபடி பி.எஸ். எல்.வி. சி-61 ராக்கெட் வருகிற 18ஆம் தேதி விண்ணில் பாய்கிறது.

கண்காணிப்பு செயற்கைக்கோள்

காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, செயற்கைக் கோள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

தேசிய பாதுகாப்பை வலுப் படுத்தவும், எல்லை கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தவும், கடலோர கண்காணிப்பை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சுமார் 55 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி, பராமரித்து வருகிறது.

இந்த நிலையில் 1,710 கிலோ எடை கொண்ட பூமியை கண்காணிப் பதற்கான இ.ஓ.எஸ்-09 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத் துள்ளது. இது சி-பாண்ட் செயற்கை துளை ரேடார் பொருத்தப்பட்டதாகும். இது இந்தியாவின் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தவும், கடலோர கண்காணிப்பை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சுமார் 55 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி, பராமரித்து வருகிறது. இந்த நிலையில் 1,710 கிலோ எடை கொண்ட பூமியை கண்காணிப்பதற்கான இ.ஓ.எஸ்-09 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத் துள்ளது.

இது சி-பாண்ட் செயற்கை துளை ரேடார் பொருத்தப்பட்டதாகும். இது இந்தியாவின் கண்காணிப்பு  மற்றும் பேரிடர் மேலாண்மை திறன்களை மேம்படுத்த உதவும். இந்த செயற்கைக் கோள், ஆந்திரா மாநிலம் சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி ராக்கெட் மூலம் வருகிற 18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.50 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணியான கவுண்டவுன் வருகிற 17ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது.

6ஆவது செயற்கைக்கோள்

இ.ஓ.எஸ்-09 புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் ரிசார்ட்-1பி வரிசையில் 6ஆவது செயற்கைக் கோளாகும். 10 ஆண்டுகள் ஆயுட் காலத்தை கொண்ட இது இஸ்ரோவின் ஒரு ரேடார் இமேஜிங் செயற்கைக் கோளாகும். விவசாயம், தோட்டங்கள், மண் ஈரப்பதம், நீரியல் மற்றும் வெள்ளம் வரைபடம் போன்ற பயன்பாடுகள், வானிலை மாறுபாடு மற்றும் இரவு, பகல் நேரங்களில் பூமியின் மேற்பரப்பில் உயர் தெளிவுத் திறனுடன் கூடிய படங்களை எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன்,இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கண்காணிப்பை வலுப்படுத்துவதில் இ.ஓ.எஸ்-09 செயற்கைக் கோள் முக்கிய பங்கு வகிக்கும். மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *