மே மாதம் கருஞ்சட்டை மாநாடு. மாநாட்டிற்காகப் பெரிய பந்தல் வைகையாற்றில் போடப்பட்டு இருந்தது. இந்த மாநாட்டிற்குப் பல்லாயிரக் கணக்கான மக்கள் கருஞ்சட்டை அணிந்து வந்திருந்தார்கள். தாய்மார்களும், ஆண்களுக்கு இணையாக கருப்புச் சேலை உடுத்தியி ருந்தனர். காலையில் மிகப்பெரிய அளவில் ஊர்வலம் நடைபெற்றது. கருஞ்சட்டை மாநாடு கடலலைப் போல் காட்சியளித்தது. ஸநாதனிகள் இம்மாநாட்டு ஊர்வலத்தைப் பார்த்து சினம் கொண்டனர்; சீற்றம் அடைந் தனர்.
மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மதுரை முத்து, தோழர் அய்யாசாமி போன்ற தோழர்கள் அரும்பாடுபட்டு ஏற்பாடு செய் திருந்தனர். மதுரையில் உள்ள ஷெனாய் நகர் பகுதி அப் போதுதான் உருவாகிக் கொண்டு இருந்தது.
ஸநாதனக்கூட்டத்திற்கு விலைபோன சமூகவிரோதிகள் மாநாட்டில் புகுந்தனர். கருஞ் சட்டை வீரர்களைக் கண்டபடி தாக்கினர். மாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைத்தனர்.
மாநாட்டுக்கு வந்திருந்த ஆண் களும், பெண்களும் சிதறி ஓடினர்.. மாநாடு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே இக்கல வரம் வெடித்தது.
பெரியார் தங்கியிருந்த மாளிகையின் முன்னே தோழர்கள் கையில் கம்போடு பாதுகாப்புக்கு நின்றிருந்தார்கள். தலையில் முண்டாசுக் கட்டிக்கொண்டு முண்டா பனி யனுடன் கையில் பெரிய கம்போடு ஓடினார் நாவலர் நெடுஞ்செழியன்!
நடிகவேள் எம்.ஆர்.ராதா, உள்ளிட்ட தோழர்கள் எதிரிகளோடு போராடிக் கொண்டிருந்தனர். மாநாட்டுக்கு கேவி. அழகர்சாமியும், இளைய பட்டக்காரர் என்.அருச்சுனனும் மாநாட்டுக்கு வந்திருந்தனர் காஞ்சி கல்யாண சுந்தரம், ஆ.திராவிடமணி, அரங்கண்ணல் போன்ற இயக்க முக்கியஸ்தர்கள் தாக்குதலுக்கு ஆளாகித் தப்பித்தனர்.
மாநாட்டுப் பந்தலைக் கொளுத்தி சூறையாடிய கூட்டம் மாபெரும்ஒலியை எழுப்பிக்கொண்டு பெரியார் தங்கி யிருந்த இடம் நோக்கி வரலாயிற்று. நமது தோழர்களும் பெரியார் தங்கியிருந்த பங்களா முன் பாதுகாப்பிற்காகக் குவிந்தனர். எதற்கும்தயாராக இருந்தனர்.