11.5.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
< இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பிரமாண்ட பேரணி: முன்னாள் படை வீரர்கள், அமைச்சர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
< பாகிஸ்தான் மீதான தாக்குதலை மாலை 5 மணி முதல் நிறுத்தியதாக இந்தியா அறிவிப்பு! அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கோரிக்கை.
< இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு; மேனாள் பிரதமர் இந்திரா அன்றைய அமெரிக்க அதிபர் நிக்சனுக்கு எழுதிய கடிதத்தை நினைவுபடுத்தி காங்கிரஸ் பதிவு.
தி இந்து:
< அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கணேஷ் சிங் தலைமையிலான நாடாளுமன்றக் குழு, வரும் மாதங்களில் அதன் கூட்டங்களின் நிகழ்ச்சி நிரலில் இது குறித்து விரிவாக விவாதிக்க உள்ளதாக தகவல்.
< தேசிய கல்விக் கொள்கை (NEP) குறித்த கேரளத்தின் கருத்துகளை தமிழ்நாடு அரசுடன் முதல் கட்ட விவாதங்கள் நடத்தப்பட்டதாக பொதுக் கல்வி அமைச்சர் வி. சிவன் குட்டி தெரிவித்தார்.
< மாநிலங்களின் அதிகாரங்களை ஒன்றிய அரசு பறிக்க நினைக்கிறது, கேரளா, தமிழ்நாடு அமைச்சர்கள் கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
< கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் பாதுகாப்பு அறையில் இருந்து தங்கக் கம்பியைக் காணவில்லை; காவல்துறை விசாரணை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
< தமிழ்நாட்டில் உள்ள 45,924 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய மாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பு (SLAS) 2021 உடன் ஒப்பிடும்போது தமிழ், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் சமூக அறிவியலில் தங்கள் கற்றல் நிலையை கணிசமாக மேம்படுத்தியுள்ளது என ஆய்வில் தகவல்.
– குடந்தை கருணா