பொய்யிலே வாழ்ந்து பொய்யிலே சாகும் சங்கிகளின் செயலுக்கு மற்றுமொரு உதாரணம்!

Viduthalai
1 Min Read

ஆர்.எஸ்.எஸ். இன் நிறுவனர் ஹெட்கேவருடன் டாக்டர் அம்பேத்கர் பைக்கில் செல்வது போன்ற படம் ஒன்றை கடந்த வாரம், இந்துத்துவ அமைப்பினர் பரப்பி வந்தனர். இப்படம் உண்மையானது அல்ல என்பதை *Factly* என்ற இணையச் செய்தி நிறுவனம் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளது.

அம்மோட்டார் சைக்கிளின் பதிவு எண் அந்தக்காலத்துப் பதிவோடு ஒத்துப் போகவில்லை. அப்படத்தை எடுத்தவர் கிறிஸ்டோபர் ஜெமினி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் உண்மை அல்ல. அப்பெயர் கொண்ட புகைப்பட நிபுணர் ஒருவர், அந்தக் காலகட்டத்தில் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

டாக்டர் அம்பேத்கர் அல்லது ஹெட்கேவர் தொடர்புடைய எந்த அதிகாரப்பூர்வ நூல்களிலோ, ஆவணங்களிலோ, ஆவணக் காப்பகங்களிலோ இப்படத்தின் நகல் இடம் பெற்றிருக்கவில்லை. அப்படத்தில் காட்டப்பட்டுள்ள பைக் எண்: 7878 7655. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முதல் மூன்று ஆங்கில எழுத்துக்குப் பிறகே நான்கு இலக்க எண்கள் (எ.கா.  MYS xxxx – Mysore) இடம் பெறும். ஆனால் வெறும் 8 இலக்க எண்கள் இடம்பெறக்கூடிய எந்த வாகனப் பதிவுகளும் காணப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

எனவே, இந்துத்துவவாதிகளால் வெளியிடப்பட்டுள்ள இந்தப் படம் முற்றிலும் மோசடியானது என *Factly* தெரிவித்துள்ளது.

‘இந்து மதம் என்பது புனிதப்படுத்தப்பட்ட இனவெறியே’ என்பது உள்ளிட்ட, பாபாசாகேப் அம்பேத்கரின் எண்ணற்ற இந்து மத எதிர்ப்புக் கருத்துகளை நேரடியாக எதிர்கொள்ளத் திராணியற்ற கூட்டம், அவரை எவ்வித ஆதாரங்களுமின்றி தன்வயப்படுத்தத் துடிக்கிறது. அதை முறியடிக்க வேண்டும் எனில், டாக்டர் அம்பேத்கரின் விடுதலைக் கருத்தியல்களை  நொடி தோறும் திசையெங்கும் பரப்புரை செய்வதே தீர்வாகும்.

‘தலித் முரசு’ – 05.05.2025

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *