3500 குடும்பங்கள் வசிக்கும் நிஜாம்பூர் சிற்றூரைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இன்றளவும் பள்ளியை யாரும் பார்த்ததே இல்லை. இச்சிற்றூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் கிட்டத்தட்ட அனைவருமே பெரும் நிலக்கிழார்களின் நிலங்களில் உழைக்கும் மக்கள் விவசாய அடிமைகளாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள நிஜாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவர் ராம்கேவல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அவ்வூரின் வரலாற்றிலேயே தேர்ச்சி பெற்று, முதல் மாணவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
நிஜாம்பூர் சிற்றூர் உத்தரப் பிரதேசத்தின் கரும்பு மற்றும் பருத்தி விவசாயத்தில் மிகவும் பெயர் பெற்றது. இங்கு பெரும் நிலக்கிழார்கள் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை வைத்து அதனை பராமரிக்க ஊரில் உள்ள நபர்களுக்கு கொடுத்துவிடுகின்றனர்.
இந்த நிலங்களில் வேலை பார்க்கும் குடும்பங்கள் வாழ்நாள் முழுவதும் வயல் வேலைகளிலேயே கழிந்து விடுகிறது.
இதிலிருந்து கிடைக்கும் பொருளாதார பயன்களையும் நிலக்கிழார்கள் அள்ளிக்கொண்டு சென்று விடுவதால், உழைக்கும் மக்களுக்கு சொற்ப ஊதியமும் உணவு தானியமும் கிடைக்கிறது.
இதனால் இப்பகுதியில் கல்விகற்க பள்ளிக்குச் செல்வதை விட குடும்பத்திற்கு உதவியாக விவசாயத்தொழிலிலேயே பிள்ளைகள் தொடர்ந்து இருக்கின்றனர்.
பெண்குழந்தைகள் கால்நடைகளைப் பராமரிக்கவும் வீட்டுவேலைகளைப் பார்க்கவுமே தங்கள் முழு நேரவேலையாக வைத்துள்ளனர்.
ஆகவே இங்கு பள்ளி செல்வது என்பது அத்தனைக்குடும்பத்திற்குமே முடியாத ஒன்றாகிவிடுகிறது. இந்த நிலையில் முதல் முதலாக மாணவன் ராம்கேவல் அருகில் உள்ள பாராபங்கிக்குச் சென்று 10 ஆம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் 10 ஆம் வகுப்பு தேர்வில் வென்ற மாணவர் ராம்கேவல் மேற்படிப்பிற்குச் செல்லும் எண்ணமில்லை என்று கூறிவிட்டார்?!
மகிழ்ச்சி என்று கூறுவதா, அதிர்ச்சி அடைவதா? விவசாய அடிமைக்குடும்பங்கள் வாழும் சிற்றூரில் இருந்து முதல்முதலாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவன்

Leave a Comment