சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் நிறுவனர் மற்றும் சிங்கப்பூர் மக்கள் மனம் திங்களிதழின் ஆசிரியர், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவின் சிறப்பான இலக்கியம் மற்றும் தமிழ்ப்பணியைப் பாராட்டி ’வடசென்னை தமிழ்ச் சங்கம்’ ”முத்தமிழறிஞர் கலைஞர் விருது” கொடுப்பதாக அறிவிப்பு செய்திருந்தது. விருதாளரான கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் மூலமாக பெற விருப்பம் தெரிவித்ததால், அவ்வண்ணமே வழங்கப்பட்டது. உடன்: வடசென்னை தமிழ்ச் சங்கத் தலைவர் எ.த. இளங்கோ, துணைத் தலைவர்கள் குறிஞ்சி பாலாஜி, சூ.லாரன்ஸ், ஆலோசகர் ஏவாள் ரவி, துணைச் செயலாளர் ரமாபாய், விழிகள் பதிப்பகம் தி. வேணுகோபால், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மகன் க.குமாரவேலு மற்றும் தோழர்கள் இருந்தனர். (பெரியார் திடல் – 26.06.2023)