27.6.2023 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் திருப்பூர் மாவட்டத்தில், நகராட்சி திட்டப் பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி. தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் பா. பொன்னையா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை இயக்குநர் யே.சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.