இசுலாமாபாத், மே 10 பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப், நாட்டின் அணு ஆயுதங்களை கையாளும் ராணுவ அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்ட அழைத்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில், பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்தின் பாதுகாப்பு, பயன்படுத்தும் போது ஏற்படுத்தும் தாக்கம் அதற்கான பின்விளைவுகலை மதிப்பாய்வு செய்ய நடத்தப்படுகிறது. இதில் அணு ஆயுதங்களின் நிலை, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் புவிசார் அரசியல் சூழலில் அவற்றின் பங்கு குறித்து விவாதிக்கப்படலாம். ஒரு வேளை பாகிஸ்தான் அணு ஆயுதத்தாக்குதலை நடத்தினால் ஜப்பானின் ஷிரோசிமா நாகாசாகி அணு ஆயுதத்தாக்குதலை அடுத்து உலக நாடுகள் எதிர்கோள்ளும் அடுத்த அணு ஆயுதத்தாக்குதல் என்று உலக நாடுகளால் கருதப்படுகிறது.
அணு ஆயுதங்களை கையாளும் குழுவுடன் பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை
Leave a Comment