2025-2026ஆம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர இணையதளத்தில் விண்ணப்ப பதிவு

viduthalai
2 Min Read

அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்

சென்னை, மே 9- 2025-2026ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் சேருவதற்கான இணையதள விண்ணப்பப் பதிவை அமைச்சர் கோவி. செழியன் 7.5.2025  அன்று தொடங்கி வைத்தார்.

பொறியியல்
விண்ணப்பப் பதிவு

தமிழ்நாடு முழுவதும் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 2025-2026ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவை உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தொடங்கி உள்ளது.

இந்த இணையவழி விண்ணப் பப் பதிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார்

www.tneaonline.org என்ற இணையதளத்தில் சென்று மாணவ-மாணவிகள் விண் ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு கட்டணமாக எஸ்சி., எஸ்.சி.ஏ, எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250ஆம், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.500ஆம் நிர்ண யிக்கப்பட்டு உள்ளது. இணையதள வசதி இல்லாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப் பப்பதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்ள உதவுவதற்காக தமிழ்நாடு முழுவதும் சென்ற ஆண்டை போலவே 110 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மய்யங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

கலந்தாய்வு எப்போது?

விண்ணப்பப் பதிவு மேற் கொள்வதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூன்) 6ஆம் தேதி ஆகும். அதேபோல், அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அடுத்த மாதம் 9ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதனைத்தொடர்ந்து ‘ரேண்டம்’ எண் 11ஆம் தேதி வெளியிடப்படும். மேலும் அதே மாதம் 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சான்றிதழ்கள் சரி செய்யப்பட்டு, தரவரிசைப் பட்டியல்  27ஆம் தேதி  வெளி யிடப்பட உள்ளது.

அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை குறித்த கலந்தாய்வு அறிவிப்பை வெளியிட்டதும், கலந்தாய்வு குறித்த அட்ட வணையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிடும் என அறிவித்திருக்கிறது. விண் ணப்பப்பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரி…

இதேபோல் பாலிடெக் னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். அதன்படி, 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு நேரடி, 2ஆம் ஆண்டு மற்றும் பகுதி நேர டிப்ளமோ படிப்புகளுக்கு https://www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக வருகிற 23ஆம்தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான பதிவு கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினரை தவிர மற்ற அனைவருக்கும் ரூ.150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் உள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 345 இடங்களில் சேருவதற்கும் www.tngasa.in என்ற இணையதளத்தில் வருகிற 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.2ஆம், இதர பிரிவினர்களுக்கு ரூ.50ஆம் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

விண்ணப்பப்பதிவு தொடக்க நிகழ்ச்சியில், உயர் கல்வித் துறை செயலாளர் சமயமூர்த்தி, கல்லூரிக் கல்வி ஆணையர் சுந்தரவல்லி, தொழில்நுட்ப கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *