அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும் கழிப்பறை வசதி!

2 Min Read

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மே 9- வாகன ஓட்டிகள், பயணிகள் வசதிக்காக அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கழிப்பறை பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு நுகர்வோர்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுங்கச்சாவடியில்
கழிப்பறை

சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் இஸ்மாயில் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 30.8.2024 அன்று சூரப்பட்டு சுங்கச்சாவடி வழியாக காரில் வந்தேன். அப்போது, கழிப்பறை செல்வதற்காக சுங்கச்சாவடி ஊழியரிடம் கேட்ட போது சற்று தொலைவில் இருப்பதாக கூறினார். ஆனால், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் கழிப்பறை இருந்தது.

அதேவேளையில் கழிப்பறையை யாரும் பயன்படுத்த முடியாத வகையில் பூட்டப் பட்டு இருந்தது. இதன்காரண மாக, என்னால் கழிப்பறை செல்ல முடியவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஒன்றிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கடந்த 11.2.2021 அன்று வெளியிட்டுள்ள வழி காட்டுதலில், ‘நீண்டதூர பயணத்தில் ஏற்படும் சோர்வை குறைத்து பாது காப்பான பயணத்தை மேற்கொள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு சுங்கச்சாவடிகளில் கழிப்பறை, ஓய்வறை உள்ளிட்ட குறைந்தபட்ச வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்’ என தெரி வித்துள்ளது.

சேவைக் குறைபாடு

ஆனால், சூரப்பட்டு சுங்கச் சாவடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் கழிப்பறை அமைத்திருப்பது மட்டு மல்லாமல், அதைபூட்டி வைத்திருப்பது சேவை குறைபாடு ஆகும். எனவே, ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த ஆணையத்தின் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சூரப்பட்டு சுங்கச்சாவடியை பொறுத்த மட்டில் சற்று தொலைவில் கழிப்பறைவசதி அமைக்கப்பட்டு உள்ளது. எப்படி இருந்தாலும் ஒன்றிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி, இங்கு கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறோம்.

உறுதிசெய்ய வேண்டும்

ஆனால், கழிப்பறை பூட்டப்பட்டு இருப்பதன் மூலமும், கழிப்பறைக்கான சாவியை மனுதாரருக்கு வழங்காததன் மூலமும் வாகன ஓட்டிகள், பயணிகளுக்கான சேவை முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளது. இந்த சேவை குறைபாட்டுக்காக சூரப்பட்டு சுங்கச்சாவடியை நிர்வகித்து வரும் நிறுவனம் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.2 ஆயிரமும் வழங்க வேண்டும்.

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனா ளிகளுக்கு தனித்தனி கழிப்பறைகள் இருப்பதையும், இவை எப்போதும் பயன்பாட்டில் இருப்பதையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *