பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பள்ளிக்குச் சென்று வாழ்த்துகளை கூறுங்கள்.
அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவர் களுக்கும், ஆசிரியர்களுக்கும் அய்யாவின் புத்தகங்களை பரிசளியுங்கள்.
100 % தேர்ச்சி பெற்ற அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களை சந்தித்தும் பாராட்டுகளை தெரிவியுங்கள்.
இது போலவே பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் போதும் செயலாற்றுங்கள்.மிகக் குறைந்த விலையில் பரிசளிக்க கூடிய புத்தகங்கள் நமது பெரியார் திடல் புத்தக விற்பனை நிலையத்தில் உள்ளது.போன் செய்து கேட்டால் விலைப்பட்டியல் வாட்ஸப்பில் அனுப்பி விடுவார்கள். நீங்கள் எந்த புத்தகம் எத்தனை வேண்டும் என்று குறிப்பிட்டால் உடன் அனுப்பி விடுவார்கள்.
பெரியார் புத்தக நிலையம் தொடர்பு எண்: 8300393816
உடன் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் விரைந்து செயலாற்றி, மேற்கொண்ட பணிகளை தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டுகிறோம்.
– இரா. தமிழ்ச்செல்வன் தலைவர்
– வி.மோகன் பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்