9.5.2025
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் உண்மையென மூன்று பேர் கொண்ட குழு கண்டறிந்ததை அடுத்து, இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அவரை பதவி விலக கோரியதாக அறியப்படுகிறது. இருப்பினும், நீதிபதி வர்மா அதை மறுத்துவிட்டார். மூன்று பேர் கொண்ட விசாரணை நீதிபதிகள் குழுவின் அறிக்கையையும், நீதிபதி வர்மாவின் பதிலையும் சேர்த்து, தலைமை நீதிபதி தற்போது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ளார்.
* நீதிமன்றத்தையும் இந்திய தலைமை நீதிபதியையும் விமர்சித்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபேவின் பேச்சு “மிகவும் பொறுப்பற்றது”, “அபத்தமானது” என்று உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது, ஆனால் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கிறது
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவின் மகத்தான வெற்றிக்குப் பிறகு வலுப்பெற்ற திமுக கூட்டணியை சுற்றியுள்ள வெல்லமுடியாத தன்மையின் ஒளி இன்னும் முழுமையாக குறையவில்லை.
தி ஹிந்து:
* உயர்நீதிமன்ற நீதிபதிகளின் காலியிடங்களை விரைவாக நிரப்புக: நீதிபதிகள் நியமனங்களுக் கான உச்சநீதிமன்ற கொலீஜியம் செய்த பரிந்துரை களை அங்கீகரிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்.
* பாஜக மேனாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம்: மேனாள் அமைச்சரும் பாஜக தலைவருமான கலி ஜனார்த்தன ரெட்டி, அய்தராபாத்தில் உள்ள சிபிஅய் வழக்குகளுக்கான முதன்மை சிறப்பு நீதிபதி நீதிமன்றத்தால் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* திருச்சியில் ரூ.57.45 கோடியில் நவீன வசதிகளு டன் கட்டப்பட்ட அரசு மாதிரி பள்ளியை முதல மைச்சர் திறந்து வைத்தார்: தைரியமாக தேர்வை எதிர் கொள்ள மாணவர்களுக்கு அறிவுரை
– குடந்தை கருணா